ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் – விளக்கம் இதோ

நாம் தினமும் சாப்பிடும் பழங்கள் நம் பற்கள் மஞ்சள் கறை படிவதற்கு காரணமாக இருக்கின்றது. இதை பதிவில் பார்க்கலாம்.

ஒருவரின் சிரிப்பின் அழகை வெளிப்படுத்துவது சுத்தமான வெள்ளையான பற்களே. ஆனால் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை முறையில் நாம் அறிந்தோ அறியாமலோ பின்பற்றும் சில பழக்கங்கள் மஞ்சள் பற்களுக்கு காரணமாகின்றன

இந்த பழக்கங்கள் பற்களின் இயற்கை வெள்ளை நிறத்தை மங்கச் செய்து மஞ்சள் கறைகள் உருவாகக் காரணமாகின்றன.

நமது உணவு, பானங்கள், புகையிலை பயன்பாடு மற்றும் பல் பராமரிப்பு குறைபாடுகள் போன்றவை பற்களின் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதிக்கின்றன. அந்தப் பழக்கங்கள் எவை என்பதை பதிவில் பார்க்கலாம்.

பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ | Habits That Cause Yellow Teeth

புகையிலை புகையிலையில் உள்ள நிக்கோட்டின், ஆக்ஸிஜனுடன் சேரும்போது மஞ்சள் நிறமாகி பற்களில் கறையாக மாறும். சிகரெட்டில் உள்ள தார் பற்களின் எனாமலை பாதிக்கும்.

டீ டீயில் உள்ள டானின்கள் பற்களின் எனாமலுடன் இணைந்து மஞ்சள் அல்லது பழுப்பு நிறக் கறைகளை உண்டாக்கும். அதிக டானின் அடர்த்தி கொண்ட டீ பற்களில் கறையை ஏற்படுத்தும்.

பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ | Habits That Cause Yellow Teeth

நீர்ச்சத்து குறைபாடு – தண்ணீர், நிறமிகளையும் உணவுத் துகள்களையும் அகற்றுகிறது. நாம் எடலுக்கு போதுமான தண்ணீர் குடிக்காமல் இருந்தால் அது உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தி பற்களில் கறை அதிகரிக்க செய்யும். எனவே, போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

அமிலத்தன்மை கொண்ட உணவுகள் – அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிட்டால் (சிட்ரஸ், சோடா, தக்காளி) முதலில்  உடனேயே பல் துலக்குவது, நல்லது. இது நிறமிகளை மென்மையான எனாமலுக்குள் தள்ளி கறைகளை மோசமாக்கும்.

பற்களின் மஞ்சள் கறைக்கு காரணமாகும் பழக்கங்கள் - விளக்கம் இதோ | Habits That Cause Yellow Teeth

மவுத் வாஷ் – செயற்கை மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது பற்களில் கறையை உண்டாக்கும். எனவே, அத்தகைய மவுத் வாஷ்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

சரியாக பல் துலக்காதது – சரியாக பல் துலக்காமல் இருப்பதும், இரவில் பல் துலக்காமல் விடுவதும் பற்களில் கறை ஏற்பட காரணமாகும். எனவே, இரவில் சரியான முறையில் பல் துலக்கிய பின்னர் எதுவும் சாப்பிடாமல் தண்ணர் குடித்து விட்டு துங்குவது நல்லது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker