சுவையான மட்டன் காய்கறி சூப்…. காரசாரமா எப்படி செய்றது?
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மட்டன் சூப்பில் காய்கறி சேர்த்து எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்று தான் மட்டன். மட்டனை சூப், குழம்பு, கொத்து கறி, இவ்வாறு செய்து சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம்.
ஆனால் மட்டன் சூப்பில் காய்கறி சேர்த்து செய்வதை அவ்வளவாக யாரும் செய்வதில்லை. இந்நிலையில் மட்டன் சூப் காய்கறி சேர்த்து எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மட்டன் – 2 கப்
முட்டை – 1
காய்கறிகள் – 1/2 கப்
வெங்காயம் – 1
பூண்டு – 2 பல்
இஞ்சி துண்டு – 1
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
கடலை மாவு – 1/2 டேபிள்ஸ்பூன்
சோள மாவு – 2 டீஸ்பூன்
வெண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை
மட்டனை சிறு துண்டுகளாக வெட்டி கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றில் கடலை மாவை சேர்த்து மிதமான தீயில் நிறம் மாறும்வரை வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு கடாயினை அடுப்பில் வைத்து மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், கரம் மசாலா தூள், உப்பு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
கழுவி வைத்திருக்கும் சிக்கனில் வறுத்து வைத்துள்ள கடலை மாவு மற்றும் மசாலாக்களை சேர்த்து கலந்து சுமார் 15 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் நறுக்கிய வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி சேர்த்து நன்றாக பேஸ்ட் போன்று அரைத்து வைக்கவும்.
அடுப்பில் குக்கர் ஒன்றினை வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து மிதமான தீயில் வைக்கவும். வெண்ணெய் உருகியதும், அதில் தயார் செய்து வைத்துள்ள வெங்காயம் பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி, பின்பு கலந்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்து 5 விசில் விட்டு வேக விடவும்.

மற்றொரு பிரஷர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து காய்கறிகள் மற்றும் சோள மாவு இவற்றினை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கவும்.



