ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை
குளிர்காலத்திற்கு காரசாரமான சட்னி – இந்த காயில் செய்து பாருங்க
குளிர்காலத்திற்கு இதமாக நாக்கின் சுவைக்கு ஏற்ற வகையில் முள்ளங்கி பூண்டு சட்னி எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
இந்திய உணவுகளில் சட்னி மிகவும் வழக்கமாக செய்யப்படும் ஒரு சைடிஷ் ஆகும். அந்த வகையில் நாம் எவ்வளவோ சட்னி பார்த்திருப்போம்.
அப்படி இருக்க எப்படியும் குளிர்காலத்தில் நாக்கிற்கு காரமாக எதாவது சாப்பிட வேண்டும் போல இருக்கும். அப்படி ஆசைப்படுபவர்களுக்கு முள்ளங்கி பூண்டு சட்னி மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இந்த சட்னி சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. உண்மையிலேயே பாரம்பரிய முறையில் வீட்டிலேயே இதை எப்படி செய்வது என்று பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
- முள்ளங்கி – 1 நடுத்தர அளவு
- பூண்டு – 10 முதல் 12 பற்கள்
- சீரகம் – 1 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ¼ டீஸ்பூன்
- சிவப்பு மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி தூள் – ½ டீஸ்பூன்
- பச்சை மிளகாய் – 1 (விருப்பப்படி)
- உப்பு – தேவையான அளவு
- எலுமிச்சை சாறு – ½ டீஸ்பூன்

செய்யும் முறை
- முள்ளங்கியை கழுவி, தோல் உரித்து துருவவும். அதை சில நிமிடம் விட்டு, வரும் தண்ணீரை பிழிந்து நீக்கவும்.
- கடாயில் எண்ணெய் சூடானவுடன் சீரகம் சேர்க்கவும். சீரகம் தாளித்ததும் நசுக்கிய பூண்டை போட்டு பொன்னிறம் வரும் வரை வதக்கவும்.
- இப்போது துருவிய முள்ளங்கியை சேர்த்து 4–5 நிமிடம் மிதமான தீயில் வதக்கவும். பச்சை வாசனை போகும் வரை தொடர்ந்து கிளறவும்.
- உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தூள் சேர்த்து கலக்கவும். விருப்பமிருந்தால் நறுக்கிய பச்சை மிளகாயையும் சேர்க்கலாம்.
- இறுதியாக எலுமிச்சை சாறு பிழிந்து மேலும் 2 நிமிடம் கிளறி தீயை அணைக்கவும்.
- இதை ஓரளவு ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். மென்மையாக வேண்டுமெனில் அதிகம் அரைக்கலாம், ஆனால் கொரகொரப்பாக இருந்தால்தான் சுவை சிறப்பாக இருக்கும்.



