ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

காயல்பட்டின சுவையில் வீட்டிலேயே மிளகு சிக்கன் செய்யலாம்.. தெளிவான ரெசிபி இதோ!

நமது வீட்டில் சிக்கன் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருக்கமாட்டார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சிக்கன் என்றால் விரும்பி சாப்பிடுவார்கள்.

சிக்கனை மூலப்பொருளாக வைத்து சிக்கன்65, கிரில் சிக்கன், சிக்கன் மசாலா, பள்ளிப்பாளையம் சிக்கன் என பலவிதமான ரெசிபிகளை செய்யலாம்.

இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டின ரெசிபிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. இது குறித்து யூடியூப்பர்களும் காணொளிகளை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், காயல்பட்டின சுவையில், மிளகு சிக்கன் எப்படி செய்யலாம்? என்பது பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

காயல்பட்டின சுவையில் வீட்டிலேயே மிளகு சிக்கன் செய்யலாம்.. தெளிவான ரெசிபி இதோ! | Kayalpattinam Special Pepper Chicken Recipe

தேவையான பொருட்கள்

  • சிக்கன்
  • பட்டை
  • கிராம்பு
  • மிளகு
  • சீரகம்
  • ஏலக்காய்
  • மல்லி
  • மஞ்சள் தூள்
  • உப்பு
  • இஞ்சி பூண்டு விழுது
  • தயிர்
  • பச்சை மிளகாய்
  • எண்ணெய்
  • வெங்காயம்
  • முந்திரி
  • கறிவேப்பிலை

மிளகு சிக்கன் எப்படி செய்யலாம்?

முதலில் ஒரு அகலமான கடாயை அடுப்பில் வைத்து அதில், பட்டை, கிராம்பு, மிளகு, சீரகம், ஏலக்காய், மல்லி ஆகிய பொருட்களை போட்டு கொஞ்சம் சூடானதும், நன்றாக அரைத்து கொள்ளவும்.

காயல்பட்டின சுவையில் வீட்டிலேயே மிளகு சிக்கன் செய்யலாம்.. தெளிவான ரெசிபி இதோ! | Kayalpattinam Special Pepper Chicken Recipe

அதன் பின்னர், ரெசிபிக்கு தேவையான சிக்கனை நன்றாக கழுவி ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அதன் மேல் மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, தயிர், பச்சை மிளகாய் மற்றும் அரைத்து வைத்திருக்கும் மிளகு பொடி ஆகியவற்றை நன்றாக கலந்து விடவும்.

அதே கடாயில் நெய் அல்லது எண்ணெய் விட்டு சூடானதும், வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, சிறிது கறிவேப்பிலை, தயிர் மற்றும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வதங்க விடவும்.

காயல்பட்டின சுவையில் வீட்டிலேயே மிளகு சிக்கன் செய்யலாம்.. தெளிவான ரெசிபி இதோ! | Kayalpattinam Special Pepper Chicken Recipe

வெங்காயம் பொன்னிறமாக மாறிய பின்னர், மசாலா கலந்து வைத்திருக்கும் சிக்கனை கடாயில் கொட்டி எண்ணெய் வேக விடவும்.

சிக்கன் வெந்தவுடன் இறக்கினால் சுவையான காயல்பட்டினம் சிக்கன் தயார்! வீட்டிலுள்ளவர்களுக்கு கொடுக்கும் முன்னர் பாதாம் மற்றும் முந்திரி சேர்த்தால் போதும் சுவை நன்றாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker