மருக்களை அடியோடு அகற்றும் சாறு.. இனியும் அலட்சியம் வேண்டாம்!
நாம் காணாத முடியாமல் இடங்களில் மனித பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று காரணமாக வருவது தான் மருக்கள்.
இது சிறியதாக இருந்தாலும் கரடுமுரடான சரும வளர்ச்சியை குறிக்கிறது.
கைகள், கால்கள், கழுத்து பகுதி, நெஞ்சு பகுதி, ஆசனவாய் மற்றும் பிறப்புறுப்பில் வரும். இது பார்ப்பதற்கு தட்டையான வடிவத்தில், காலிஃபிளவர் போன்று இருக்கும்.
அப்படி உங்களுடைய உடம்பில் இருந்தால் அது பாப்பிலோமா வைரஸ் வளர்ச்சியாக இருக்கலாம்.
அதிலும் குறிப்பாக, மற்ற இடங்களை விட பிறப்புறுப்பு மற்றும் ஆசனவாய்ப் பகுதிகளில் சதை நிற அல்லது சாம்பல் நிறத்தில் பார்க்கும் பொழுது ஒருவிதமான உணர்வாக இருக்கும்.

அந்த வகையில், மருக்கள் அந்தரங்க பகுதிகளில் வருவதற்கான காரணங்களை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மருக்கள் வருவதற்கான காரணங்கள்
1. பிறப்புறுப்பு மருக்கள் HPV தொற்று இருந்தால் அங்கு மருக்கள் வர வாய்ப்பு உள்ளது. முடிந்தளவு மருக்களை கண்டால் அதனை மருத்துவரிடம் கூறி இல்லாமல் செய்வது நல்லது.
2. யோனி, ஆசனவாய் அல்லது வாய்வழி உறவில் ஈடுபடும் பொழுது தொற்றுக்கள் பரவ வாய்ப்பு உள்ளது.
3. உங்களுடைய துணைக்கு HPV தொற்று இருந்தால், அது உங்களுக்கும் வர வாய்ப்பு உள்ளது.

4. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு மருக்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
5. பாலியல் தொடர்பு இல்லாதவர்களுக்கு தாயின் பிறப்புறுப்பில் இருந்து பரவலாம்.
வீட்டு வைத்தியங்கள்
1. பூண்டை தோலை உரித்து, அதனை சிறிய துண்டுகளாக வெட்டி பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும். அதனை மருக்கள் உள்ள இடங்களுக்கு தடவி வந்தால் மருக்கள் கொட்டி விடும். பூண்டு சாற்றை தடவிய உடன் துணியால் கட்டி 20 நிமிடங்கள் வைத்திருந்தாலும் சிறந்த பலனை பார்க்கலாம்.

2. எலுமிச்சை சாற்றை ஒரு பஞ்சியில் நனைத்து, அதனை மருக்கள் உள்ள இடங்களில் வைத்து வந்தால் சில நாட்களில் மருக்கள் கொட்டி விடும்.
3. ஒரு துண்டு இஞ்சியை மருக்கள் உள்ள இடத்தில் தொடர்ந்து 3 வாரங்களுக்கு தேய்த்து வந்தால், இயற்கையாகவே மருக்கள் கொட்டி விடும்.



