ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவைமருத்துவம்

மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம் – நாக்கிற்கு இதமாக எப்படி செய்வது?

மழைக்கால தொற்று நோய்களை விரட்டி நாக்கிற்கு இதமான கோழி ரசம் எப்படி சுவையாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

தற்போது மழைக்காலம் தொடங்கி விட்டது. மழைக்காலம் வந்து விட்டால் என்ன அதற்கு கூட்டாளி போல சளி இருமலும் வந்துவிடும். இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்படுவாாகள்.

இதற்கு நாம் செய்ய வேண்டியது உணவில் கவனம் செலுத்துவது தான். இந்த சளி இருமலுக்கு இதமாக கோழி ரசம் செய்து கடித்தால் சூப்பராக இருக்கும்.

இது ஆரோக்கியம் மற்றும் நிறைய சத்துக்களும் கொண்டுள்ளது. இதை எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம் - நாக்கிற்கு இதமாக எப்படி செய்வது? | Rainy Season Chicken Rasam Recipe Soup

தேவையான பொருட்கள்

  • நாட்டுக்கோழி அல்லது ப்ராயலர் சிக்கன்,
  • சின்னவெங்காயம்,
  • தக்காளி,
  • கொத்தமல்லி,
  • கருவேப்பிலை,
  • எண்ணெய்,
  • தனியா,
  • சீரகம்,
  • கரம் மசாலா,
  • சோம்பு,
  • கடுகு,
  • வெந்தயம்,
  • மிளகு,
  • காய்ந்த மிளகாய்,
  • பூண்டு,
  • இஞ்சி,
  • கல் உப்பு,
  • மிளகுதூள்.

மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம் - நாக்கிற்கு இதமாக எப்படி செய்வது? | Rainy Season Chicken Rasam Recipe Soup

செய்யும் முறை

கோழி ரசம் செய்ய முதலில் இரண்டு டீஸ்பூன் தனியா, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் சோம்பு, இரண்டு டீஸ்பூன் மிளகு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் எடுத்து கொள்ளவும்.

பின்னர் 15 சின்ன வெங்காயம் எடுத்து அதை நன்றாக இடித்து கொள்ளவும். பின்னர் 5 பல் பூண்டு மற்றும் விரல் நீளத்திற்கு இஞ்சி ஒன்று எடுத்துக் இரண்டையும் சேர்த்து இடித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் சிக்கன் எடுத்து அதையும் உரலில் போட்டு தனித்தனியா பிரியும் வரை இடித்து எடுத்துக்கொள்ளவும்.

மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம் - நாக்கிற்கு இதமாக எப்படி செய்வது? | Rainy Season Chicken Rasam Recipe Soup

பாத்திரத்தில் இரண்டு டீஸ்பூன் எண்ணெய், அரை டீஸ்பூன் கடுகு, சோம்பு, வெந்தயம், கருவேப்பிலை மற்றும் மிளகாயை சேர்த்து அவற்றை நன்றாக வதக்க வேண்டும்.

இதன்பின் இடித்த சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு, அரைத்து வைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக  வதக்கவும்.

இதில் இடித்து வைத்த சிக்கனை சேர்த்து அரை டீஸ்பூன் மஞ்சள்தூள், கரம் மசாலா, ஒரு டீஸ்பூன் கல்உப்பு சேர்த்து கொஞ்சம் கொத்தமல்லி சேர்த்து ஜந்து நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்.

மழைக்காலத்திற்கு கமகமனு கோழி ரசம் - நாக்கிற்கு இதமாக எப்படி செய்வது? | Rainy Season Chicken Rasam Recipe Soup

இதன் பின்னர் நான்கு முதல் ஐந்து கப் வரை தண்ணீர் ஊற்றி அதில் தக்காளி சேர்த்து மூடிவிட்டு 10 நிமிடம் நன்றாக கொதிக்க விடவும். இறுதியாக மிளகு தூள் மற்றும் கொத்தமல்லி சேர்த்து கொதிக்க விட்டு எடுத்தால் கமகமக்கும் கோழி ரசம் தயார்.

இதை வாரத்தில் எல்லா நாட்களும் செய்யலாம். அப்படி இல்லை என்றால் வாரத்தில் மூன்று மறை செய்து வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் கொடுத்தால் சளி இருமலுக்கு இந்த ரசம் இதமாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker