கேரளா ஸ்டைல் மசாலா ஆம்லேட்… ட்ரை பண்ணி பாருங்க வித்தியாசமா இருக்கும்
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றான முட்டையை பல வகைகளில் நாம் சமைத்து சாப்பிட்டிருப்போம். தற்போது மசாலா ஆம்லேட் கேரளா ஸ்டைலில் எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
முட்டை – 2
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் பொடி – சிறிதளவு
பூண்டு – 2 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
மிளகாய் பொடி – அரை ஸ்பூன்
மிளகு பொடி – அரை ஸ்பூன்
சிக்கன் மசாலா – அரை ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – 2 ஸ்பூன்

செய்முறை
முட்டையை பவுல் ஒன்றில் உடைத்து ஊற்றி, அதனுடன் சிறிதளவு வெங்காயம், மஞ்சள் பொடி, உப்பு, சிறிது பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
கடாய் ஒன்றில் எண்ணெய் ஊற்றி பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் சற்று வதங்கிய பின்பு மிளகாய் பொடி, மிளகு பொடி, சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

நாம் சேர்த்து மசாலா பொடிகளின் பச்சை வாசனை நீங்கும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். பின்பு பவுலில் கலந்து வைத்திருக்கும ்முட்டையை வதக்கிய மசாலா வெங்காயத்தின் மேலே ஊற்றவும்.
ஒரு புறம் வேக வைத்த பின்பு ஆம்லேட்டை மறுபுறம் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும். அவ்வளவு தான் சுவையான மசாலா ஆம்லேட் கேரளா ஸ்டைலில் தயார்.



