ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

காரசாரமான சிக்கன் தொக்கு – பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க

நீங்கள் அடிக்கடி வீட்டில் சிக்கன் சமைக்கும் நபராக இருந்தால் எத்தனை தடவை தான் ஒரே போல சமைப்பீர்கள். ஒருமுறை இந்த சிக்கன் தொக்கையும் சமைத்து பாருங்கள்.

காரசாரமாகவும் இருக்கும் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.

அவசரமாக காலையில் வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த சிக்கன் தொக்கை பத்தே நிமிடத்தில் செய்யலாம். இதற்கு உரிய மசாலா பொருட்களை அப்படியே போடுங்கள்.

காரசாரமான சிக்கன் தொக்கு - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | Home Made Chicken Dhokku Recipe In 10 Minites

 தேவையான பொருட்கள்

  • சிக்கன் – 500 கிராம்
  • வெங்காயம் – 2 (பெரியது)
  • தக்காளி – 2
  • இஞ்சி-பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
  • மல்லித்தூள் – 1/2 டீஸ்பூன்
  • கரம் மசாலா தூள் – 1/2 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • எண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.

செய்முறை

முதலில் சிக்கனை மஞ்சத்தூள் போட்டு நன்றாக கழுவி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் தேவையான அளவு தயிர் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறி தனியாக ஊறவைத்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு கடலெண்ணெய் ஊற்றி அதில் நறுக்கி வைத்த வெங்காயம் போட்டு அது பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் ஓரளவு வதங்கி வரும்போது அதில் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

காரசாரமான சிக்கன் தொக்கு - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | Home Made Chicken Dhokku Recipe In 10 Minites

இதற்கிடையில் தக்காளியை நன்றாக அடுப்பில் சுட்டெடுத்துக் கொண்டு பிறகு அதனுடைய தோலை உரித்து பிறகு தக்காளியுடன் பூண்டை சேர்த்து நன்றாக பேஸ்ட் போல் அரைத்து வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு பொன்னிறமான வெங்காயத்துடன் மஞ்சத்தூள் சீரகத்தூள் காஷ்மீர் மிளகாய்த்தூள், கருவேப்பிலை, கறி மசாலா இவற்றை வெங்காயத்துடன் சேர்ந்து நன்றாக  வதக்க வேண்டும்.

பிறகு அதில் தக்காளி பேஸ்டை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். எண்ணெய் கூடி வரும் பொழுது அதில் ஊற வைத்த சிக்கனை கொட்டி ஒரு அரை மணி நேரமாக நன்றாக வதக்க வேண்டும்.

காரசாரமான சிக்கன் தொக்கு - பத்தே நிமிடத்தில் இப்படி செய்ங்க | Home Made Chicken Dhokku Recipe In 10 Minites

இறுதியாக  மிளகாயிலுள்ள விதைகளை எடுத்துவிட்டு அதனை இரண்டு துண்டுகளாக வெட்டி பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிளற வேண்டும். இதன் பின்னர் சீரகத்தூளை அதன் மேல்  தூவி விட வேண்டும்.

இதனை அனைத்துமே நன்றாக வதக்கி எடுத்தால் சுவையான அட்டகாசமான  சிக்கன் தொக்கு தயாராகி விடும். இதை சப்பாத்தி, தோசை இவற்றுடன் சேர்த்து சாப்பிடும் பொழுது வாயில் எச்சில் ஊரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker