ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்?

பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பப்பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. அது சுவைக்கு மாத்திரமன்றி ஆரோக்கிய நன்மைகளுக்கும் பெயர் பெற்றது.

ஆட்டு இறைச்சியில் வேறு சில இறைச்சிகள் கொண்டிருக்கும் கலாச்சார அல்லது மதத் தடைகள் இல்லை, இது பெரும்பாலான கலாச்சாரங்களுக்கும் ஏற்றதாக அமைகிறது.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை தருகிறது. இதில், பல்வேறு மருத்துவ பலன்களும் காணப்படுவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

முக்கியமாக ஆட்டு இறைச்சி சாப்பிடும் போது, சதை இறைச்சியை மட்டும் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதனுடைய உறுப்பு இறைச்சியையும் சேர்த்து சாப்பிட வேண்டியது அவசியம்.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

அந்தவகையில்,ஆரோக்கியமான சிவப்பு இறைச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஆட்டிறச்சியின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

ஆட்டு எலும்பில் கொலாஜன் என்ற பொருள் அதிகமாக இருப்பதால், இது மூட்டு வலிக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் .அதில் அதிகளவில் காணப்படும் கொலாஜன் மூட்டுப் பகுதிகளில் உள்ள இணைப்பு திசுக்களுக்கு ஒரு நல்ல ஊட்டச்சத்தை அளிக்கிறது.

இதனால், மூட்டுப் பகுதியில் உள்ள வலி மற்றும் வீக்கம் விரைவில் குணமடைய வாய்ப்பு காணப்படுகின்றது. அத்துடன் என்றும் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் ஆட்டு எலும்பில் அடிக்கடி சூப் வைத்து சாப்பிடலாம். அதனால் நீண்ட காலம் வரையில் சருமம் பளபளப்பு குறையாமல் இருக்கும்.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

ஆட்டின் மூளையானது, தாது விருத்தியை ஏற்படுத்துகிறது. மேலும் கண்ணுக்கு குளிர்ச்சியளிப்பதுடன் அதிக நினைவாற்றல், வலிமையான மூளை போன்ற நன்மைகளுக்கு ஆட்டின் மூளையை உணவில் சேர்த்துக்கொள்வது பெரிதும் துணைப்புரியும்.

மேலும் ஆட்டின் மூளைப் பகுதியை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வந்தால், கபத்தை நீக்கி, மார்பு பகுதியில் இருக்கும் புண்களை குணப்படுத்தி, மார்பக பகுதியை வலிமை அடையச் செய்கிறது.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

ஆட்டு இறைச்சி மெலிந்ததாக இருப்பதால், இது குறைந்த கலோரிகளுடன் கூடிய புரதத்தின் சிறந்த மூலமாகும். எடை இழக்க விரும்புவோருக்கு இது பயனளிக்கும்.

ஆட்டு இறைச்சியில் 3 அவுன்ஸ் (85 கிராம்) க்கு சுமார் 1 கிராம் நிறைவுற்ற கொழுப்பு உள்ளது, இது மற்ற சில இறைச்சிகளை விட குறைவாக உள்ளது. எனவே உடல் எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களும் ஆட்டிறைச்சியை எடுத்துக்கொள்ளலாம்.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

பிற சிவப்பு அல்லது வெள்ளை இறைச்சிகளை விட ஆட்டிறச்சியில் இரும்புச்சத்து அதிகம். ஆட்டு இறைச்சியில் 3 அவுன்ஸ் (85 கிராம்) ஒன்றுக்கு தோராயமாக 3.2 மி.கி இரும்புச்சத்து உள்ளது. இது மெலிந்த மாட்டிறைச்சி (1.8 மி.கி) மற்றும் கோழி மார்பகத்தில் (0.42 மி.கி) காணப்படும் இரும்பின் அளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இரும்பு என்பது நாம் உண்ணும் உணவில் உட்கொள்ளப்படும் ஒரு முக்கியமான கனிமமாகும். போதுமான இரும்புச்சத்து இல்லாமல், உடல் முழுவதும் ஆக்ஸிஜனைக் கொண்டு செல்லும் சிவப்பு இரத்த அணுக்களில் காணப்படும் ஒரு புரதமான ஹீமோகுளோபினை உடலால் உருவாக்க முடியாது.எனவே ரத்த சோகையை தடுப்பதில் ஆட்டிறைச்சி முக்கிய பங்கு வகிக்கின்றது.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

ஆட்டின் இதயத்தை சமைத்து சாப்பிவதால், நமது இதயத்திற்குப் நல்ல பலம் கிடைக்கும். மேலும் நமது மன ஆற்றல் அதிகரிக்கும்.

ஆட்டின் நுரையீரல் மற்றும் கொழுப்புகள் நமது உடலின் வெப்பத்தை குறைத்துக் குளிர்ச்சியை ஏற்படுத்துவதுடன், நுரையீரல் மற்றும் இடுப்புப் பகுதிக்கு நல்ல வலிமை கொடுக்கும். பார்வை கோளாறுகள் சரியாகும், தெளிவான பார்வை கிடைக்கும். கண்களுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும்.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

ஆட்டிறைச்சியை சமைக்கும் விதமும் அதன் ஊட்டசதத்தது மற்றும் ஆரோக்கிய நன்மைகள் குறையாமல் இருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது. உதாரணமாக எண்ணெய் அதிகமாக ஊற்றி ஆட்டிறைச்சியை வறுத்து எடுத்தல், அதிக தீயில் சமைப்பது ஆகியவை ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை ஆரோக்கியமற்றதாக மாற்றிவிடும்.

அதே குறைவான எண்ணெயில் மட்டன் க்ரில், வேக வைத்த மட்டன், மட்டன் சூப் தயாரித்து சாப்பிட்டால் அதில் உள்ள ஊட்டச்சத்துகள் குறையாமல் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.

ஆட்டிறைச்சியில் இவ்வளவு நன்மைகளா! வாரத்திற்கு எத்தனை முறை சாப்பிடலாம்? | Mutton Health Benefits In Tamil

குறிப்பாக சிகப்பு இறைச்சி ஆரோக்கியமானதாகவே இருந்தாலும்  எப்போதுமே ஒரு குறிப்பிட்ட அளவில் சாப்பிடுவது நல்லது. உடலில் கலோரி பற்றாக்குறை தெரிந்தால் உணவுமுறையில் வாரத்திற்கு இரண்டு முறை சாப்பிடலாம். அல்லது வாரத்திற்கு ஒரு முறை சாப்பிடுவது சிறப்பு.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker