ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

சிக்கனை இந்த மாதிரி பொரித்து சாப்பிடுங்க… ருசி வேற லெவல்ல இருக்கும்

அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் ஒன்றான சிக்கன் 65 வித்தியாசமான முறையில் மசாலா அரைத்து எவ்வாறு செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

சிக்கன் – முக்கால் கிலோ
சின்னவெங்காயம் – 10
பூண்டு – 10
இஞ்சி – சிறிதளது
கறிவேப்பிலை – ஒரு கொத்து
சோம்பு – 1 ஸ்பூன்
மல்லி இலை – ஒரு கைப்பிடி
காய்ந்த மிளகாய் – 7

சிக்கனை இந்த மாதிரி பொரித்து சாப்பிடுங்க... ருசி வேற லெவல்ல இருக்கும் | How To Different Style Chicken 65

முட்டை – 1
காஷ்மீர் மிளகாய் பொடி – ஒன்றரை ஸ்பூன்
சோள மாவு – ஒன்றரை ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
மிளகு தூள் – அரை ஸ்பூன்
எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
உப்பு – தேவையான அளவ

செய்முறை

முதலில் சிக்கனை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். பின்பு மிக்ஸி ஜார் ஒன்றில் சின்னவெங்காயம், பூண்டு, இஞ்சி, சோம்பு, கறிவேப்பிலை, மல்லி இலை, காய்ந்த மிளகாய் இவற்றினை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

சிக்கனை இந்த மாதிரி பொரித்து சாப்பிடுங்க... ருசி வேற லெவல்ல இருக்கும் | How To Different Style Chicken 65

கழுவி வைத்திருக்கும் சிக்கனில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும். இதனுடன் மிளகாய் பொடி, முட்டை சோள மாவு, மஞ்சள் தூள், மிளகு, எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து வைக்கவும்.

ஒரு 30 நிமிடம் ஊற வைத்த பின்பு எண்ணெய்யை சட்டியில் ஊற்றி காய வைத்து அதில் சிக்கனைப் போட்டு பொரித்து எடுத்தால் ்வித்தியாசமான சுவையில் சிக்கன் 65 தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker