ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்பு

தீபாவளியை ஸ்பெஷலாக்கும் சாமை அல்வா- நீங்களும் செய்து பாருங்க

பொதுவாக பண்டிகைகள் வந்து விட்டால் பட்டாசுகள் வெடிப்பது, இனிப்பு பண்டங்கள் தயாரிப்பது வழக்கம்.

பச்சரிசியில் அதிரசங்கள் தான் வழக்கமாக அநேகமான வீடுகளில் செய்வார்கள். இந்த வருடம் கொஞ்சம் வித்தியாசமான ரெசிபிகளை செய்தால் வீட்டிலுள்ளவர்களும் மகிழ்ச்சியாக சாப்பிடுவார்கள்.

கருப்பு கவனி, மாப்பிள்ளை சம்பா, சாமை அரிசி ஆகிய தானியங்களில் இனிப்பு பண்டங்கள் செய்தால் அது அன்றைய நாளை இனிமையாக்கி உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.

அநேகமான உடல் ஆரோக்கிய பலன்களை கொண்டிருக்கும் சாமை அரிசி திருநெல்வேலியின் அடையாளமாக உள்ளது. கடைகளில் விற்பனை செய்யப்படும் அல்வாக்களில் பேரிச்சம்பழம், தடியங்காய், கேரட், பீட்ரூட் ஆகிய வைத்து அடையாளம் காண்பார்கள்.

Diwali Sweet: தீபாவளியை ஸ்பெஷலாக்கும் சாமை அல்வா- நீங்களும் செய்து பாருங்க | Homemade Samai Millet Halwa Recipe

அந்த வகையில் அநேகமான மக்கள் விரும்பி சாப்பிடும் சாமை அரிசி அல்வா எப்படி இலகுவாக செய்யலாம் என்பதை பதிவில் பார்க்கலாம்.

 தேவையான பொருட்கள்

  • சாமை- 1 கப்
  • தண்ணீர் – 2 கப்
  • நெய்- அரை கப்
  • வெல்லம் – அரை கப்
  • ஏலக்காய்த் தூள் – அரை ஸ்பூன்
  • முந்திரி, உலர் திராட்சை- தேவையான அளவு

செய்முறை

முதலில், தேவையான அளவு சாமையை எடுத்து கழுவ வேண்டும்.

Diwali Sweet: தீபாவளியை ஸ்பெஷலாக்கும் சாமை அல்வா- நீங்களும் செய்து பாருங்க | Homemade Samai Millet Halwa Recipe

குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைத்து விட்டு ஒரு பாத்திரத்தில் சாமையை போட்டு நீர் ஊற்றி வேக வைக்கவும்.

சாமை அரிசி போன்று இருப்பதால் அழுத்தி பார்த்து வெந்து விட்டதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சாமை வெந்த பின்னர் தண்ணீரை வடித்து விட்டு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு ஊருக விடவும்.

Diwali Sweet: தீபாவளியை ஸ்பெஷலாக்கும் சாமை அல்வா- நீங்களும் செய்து பாருங்க | Homemade Samai Millet Halwa Recipe

நெய் உருகியவுடன் வேகவைத்த சாமையை நன்றாக போட்டு வதங்க விடவும். நெய்யும் சாமையும் நன்றாக கலந்து விட்டு வெல்லம் போட்டு எல்லாவற்றையும் நன்றாக கலந்து விட வேண்டும்.

அதன் பின்னர், ஏலக்காய்த் தூள், முந்திரி, திராட்சை சேர்த்து கிளறி விட்டு இறக்கினால் இனிப்பான சாமை அல்வா தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker