ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தலையில் பேன்களுக்கு முடிவு கட்டணுமா? இந்த 2 பொருட்கள் இருந்தா போதும்

தலையில் பேன் சேர்வது மிகவும் பொதுவான விடயம். இதற்கு பயப்பட தேவை இல்லை. ஆனால் அதிகமான பேன்கள் தலையில் இருந்தால் அது கடித்து கடித்து தலையில் காயங்களை உண்டாக்கும். இதனால் தலையை பார்க்க அருவருப்பாக இருக்கும்.

இதனால் அரிப்பு ஏற்பட்டு நமது கைகள் தலையை சொறிந்துகொண்டே இருக்கும். இதற்கு காரணம் நாம் தலையை சுத்தமாக பராமரிக்காதது தான்.

பலரும் பேன் தொல்லையை விரட்ட பல விலை உயர்ந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த பொருட்கள் உங்களுக்கு வேலை செய்யவில்லை என்றால் இந்த 2 பொருட்கள் கொண்டு தலையில் உள்ள பேன்களை அப்படியே விரட்ட வேண்டும்.

தலையில் பேன்களுக்கு முடிவு கட்டணுமா? இந்த 2 பொருட்கள் இருந்தா போதும் | Head Lice Remove Just 2 Items Simple Home Remedy

ஆப்பிள் சீடர் வினிகர் – தலையில் பேன்களை விரட்ட ஒரு அளவான ஸ்ப்ரே பாட்டிலை எடுத்து அதில் அரை கப் ஆப்பிள் சீடர் வினிகரை 2 கப் தண்ணீருடன் கலக்கவும். இதை நன்றாக மிக்ஸ் செய்யவும்.

இதை முடிக்கு தடவ முதல் உச்சந்தலையில் முதலில் தடவ வேண்டும். காரணம் உச்சந்தலையில் இந்த ஸ்பேரேயை தடவ காரணம் உச்சந்தலையில் பேன்கள் ஓடிக்கொண்டிருக்கும். இதன் பின்னர் தலைமுடியில் வேர்களுக்கு படும்படியாக ஸ்ப்ரே செய்யவும்.

சிறிது நேரம் கழித்து, தலைமுடியை சீப்பு கொண்டு சீவவும். பேன்கள் கீழே விழும். இப்போது உங்கள் தலைமுடியைக் கழுவவும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை முடியில் பயன்படுத்துவது பேன்களைத் தடுக்கும்.

தலையில் பேன்களுக்கு முடிவு கட்டணுமா? இந்த 2 பொருட்கள் இருந்தா போதும் | Head Lice Remove Just 2 Items Simple Home Remedy

ஆலிவ் எண்ணெய் – பேன்களை விரட்ட மற்றைய எண்ணெய்யை விட உங்கள் தலைமுடிக்கு ஆலிவ் எண்ணெயைத் தடவவும். இந்த எண்ணெய்யை உச்சந்தலையில் தான் தடவ வேண்டும்.

தலைமுடியின் வேர்கள் மற்றும் நுனிகளிலும் எண்ணெயைப் பூசவும். இப்போது உங்கள் தலைமுடியை இறுக்கமாகக் கட்டி, ஷவர் கேப்பால் மூடி வைக்கவும். இது இரவு முழுவதும் அப்படியே இருக்க வேண்டும்.

மறுநாள் காலையில் தலைமுடியை நன்கு சீவவேண்டும். உங்கள் தலையில் இருக்கும் பேன்கள் இறந்துவிடும். இந்த வழிமுறையை தினமும் பின்பற்றி பாருங்கள் தலையில் ஒரு பேன் கூட இருக்காது.

தலையில் பேன்களுக்கு முடிவு கட்டணுமா? இந்த 2 பொருட்கள் இருந்தா போதும் | Head Lice Remove Just 2 Items Simple Home Remedy

அவசியமான குறிப்புகள்

தலையில் குளித்தவுடன் ஈரமாக இருக்கும் சமயத்தில் தலையை கட்ட கூடாது. இது பேன்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். இதிலும் மிகவும் முக்கியமாக தலைமுடியை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

அழுக்கும் பேன்களை ஏற்படுத்தும். நீண்ட கூந்தலில் பேன் தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது, எனவே உங்களுக்கு நீண்ட கூந்தல் இருந்தால், அதை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்.

முடி சீப்பைப் பயன்படுத்துவதற்கு முன், அது சுத்தமாக இருப்பது அவசியம். ஒருவர் பயன்படுத்தும் சீப்பை பயன்படுத்த கூடாது. அழுக்கு சீப்பைப் பயன்படுத்துவது பேன் வளர்ச்சியை தூண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker