தினமும் குடிங்க.. தலைமுடி வளர்ச்சி இரு மடங்காகும்
உலக நாடுகளில் அநேகமானவர்களுக்கு இருக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் தலைமுடி உதிர்வு.
இது பல காரணங்களால் ஏற்படுகின்றது என்றாலும், உடலில் போதுமான ஊட்டசத்துக்கள் இல்லாமல் இருக்கும் பொழுதும் தலைமுடி அதிகமாக உதிர்கிறது. தன்னுடைய உடலில் எந்த வைட்டமின் குறைபாடு உள்ளது? என்பதை தெரிந்து கொள்ள முன்னர், ஏகப்பட்ட குறைபாடுகள் வந்து விடுகிறது.
தற்போது இருக்கும் ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கங்களே இதற்கான முக்கிய காரணமாக அமைகிறது.
தலைமுடி கொஞ்சமாக உதிரும் பொழுது அலட்சியம் கொள்ளாது. அதனை முறையாக கவனித்து ஊக்கம் கொடுப்பது அவசியம்.
அந்த வகையில், போதுமான ஊட்டசத்துக்கள் இல்லாமல் உதிரும் தலைமுடி வளர்ச்சியை இரு மடங்காக அதிகரிக்கும் பானம் எப்படி தயாரிக்கலாம் என்பதையும், அதனால் கிடைக்கும் வேறு பலன்கள் என்னென்ன என்பதையும் பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி கொட்டுதல் என்பது இருபாலாருக்குமே தலையாய பிரச்சினையாக இருப்பதால் போலியான விளம்பரங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அதனை நம்பி பொருட்கள் வாங்கி பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
தலைமுடி அதிகமாக உதிருமானாமல் அதற்கு முக்கிய காரணம் வைட்டமின் B7 குறைபாடுதான் (பயோடின்). இதனை சரிச் செய்ய கேரட்டில் பானம் செய்து குடிக்கலாம்.
கேரட் ஜூஸில் உள்ள வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் B வைட்டமின்களோடு பொட்டாசியம் போன்ற தாதுக்கள் தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதிலும் குறிப்பாக கேரட்டில் அதிக அளவு பீட்டா கரோட்டின் காணப்படுகிறது. இது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது என பல ஆய்வுகள் கூறுகின்றன.
அதே போன்று மயிர் கால்களை ஈரப்பதத்தோடு வைத்துக் கொள்வதுடன் இயற்கையான எண்ணெய் உற்பத்திக்கும் இந்த வைட்டமின் அவசியமாகிறது. அத்துடன் வைட்டமின் A இல்லாவிட்டால் மயிர் கால்கள் வறண்டு போகும் பிரச்சினை உள்ளது.