“டாப் குக்கு டூப் குக்கு” சிவானி செய்து அசத்திய அரவண பாயாசம் – நாவூறும் ரெசிபி இதோ
சபரிமலை ஐயப்பன் கோவிலின் தனித்துவமான பிரசாதங்களில் அரவண பாயாசம் முக்கியமானது. இதன் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.
இந்த அரவண பாயாசம் செய்வதற்கு தெரிந்து இருந்தால் மட்டும் போதாது அது ஒரு கலை என்று தான் சொல்ல வேண்டும். இதை பொறுமை இருக்கும் நபர்களால் மட்டுமே சுவையும் மணமும் மாறாமல் செய்ய முடியும்.
இந்த பாயாசத்திற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆரோக்கியமாககும் இயற்கையாகவும் இருக்கும். இவை அனைத்தும் உடலுக்கு நன்மை பயக்கும் சத்துக்களைக் கொண்டுள்ளன. இதற்கான ரெசிபியை இங்கு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புழுங்கல் அரிசி – 200 கிராம்
- வெல்லம் – 1 கிலோ
- நெய் – 250 மில்லி
- ஏலக்காய் – 4
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
முதலில் புழுங்கல் அரிசியை நன்கு கழுவி, 3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து, வடிகட்டி தனியாக வைக்கவும்.
வடிகட்டிய வெல்ல கரைசலை அடுப்பில் வைத்து மிதமான தீயில் காய்ச்சவும். பாகு கம்பி பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். காய்ச்சிய வெல்லப்பாகில் ஊறவைத்த அரிசியை சேர்த்து, கைவிடாமல் கிளறவும்.
தீ மிதமான அளவில் இருக்க வேண்டும். அரிசி வெந்து, பாகுடன் கெட்டியாக ஆரம்பித்ததும், நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும். பின்னர், தொடர்ந்து கிளறவும். இறுதியில், பாயாசம் நன்கு கெட்டியானதும், ஏலக்காய் பொடியை சேர்த்து கிளறி இறக்கவும். இவ்வளவு தான் அரவண பாயாசம் தயார்.