ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

விருந்தாளிகளை மகிழ்விக்கணுமா? 3 முட்டை 1 உருளைக்கிழங்கு இருந்தா போதும்

வீட்டிற்கு விருந்தாளிகள் திடீரென வந்து விட்டால் அவர்களுக்கு செய்து கொடுக்க இந்த ரெசிபி மிகவும் சிறந்தாக இருக்கும்.

வீட்டில் காலை உணவு மதிய உணவு என நாம் 3 வேளையும் உணவு செய்ய வேண்டும். அது தான் நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. அதிலும் இதில் ஏதாவது ஒரு வேளை உணவை சரி எளிதாக செய்வது மிகவும் முக்கியம்.

அதற்கு தான் இந்த பதிவில் உதவ போகின்றாம். அதாவது வீட்டில் முட்டையும் உருளைக்கிழங்கும் இருக்கிறது இதை வைத்து என்ன செய்வது என யோசித்தால் அதற்கு ஒரு சூப்பரான ரெசிபி செய்யலாம்.

முதலில் இந்த பதிவில் செய்யப்போகும் ரெசிப்பிக்கு தேவையான பொருட்கள் பார்க்கலாம்.

விருந்தாளிகளை மகிழ்விக்கணுமா? 3 முட்டை 1 உருளைக்கிழங்கு இருந்தா போதும் | Just Mix 3 Eggs And Potatoes Healthy Food Recipe

தேவையான பொருட்கள்

  • முட்டை – 3
  • உருளைக்கிழங்கு – 1
  • Parsley (வோக்கோசு) – 3 துளிர்
  • கொடைமிளகாய் – 4
  • வெங்காயம் – 3
  • மிளகு தூள் – 3டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • சீஸ் – தேவைக்கேற்ப
  • கோதுமை மா – இ ஸ்பூன்

செய்யும் முறை

முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து அதை நன்றாக கலக்கி வைக்க வேண்டும். பின்னர் உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதை துருவி எடுக்க வேண்டும்.

துருவிய அந்த உருளைக்கிழங்கை பாத்திரமொன்றில் தண்ணீர் எடுத்து கழுவி வடிகட்டி எடுக்க வேண்டும். வடிகட்டிய தண்ணீரை தனியே எடுத்து வைக்கவும்.

விருந்தாளிகளை மகிழ்விக்கணுமா? 3 முட்டை 1 உருளைக்கிழங்கு இருந்தா போதும் | Just Mix 3 Eggs And Potatoes Healthy Food Recipe

பின்னர் வடிகட்டிய உருளைக்கிழங்கு துருவலுடன் கலக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். பின்னர் அதில் வோக்கோசு (Parsley)இலைகளை நறுக்கி சேர்க்க வேண்டும்.

இதற்கு பதிலாக நீங்கள் வேறு இலைகளையும் பயன்படுத்தலாம். அதே கலவையில் கொடைமிளகாய் வெங்காயம் நறுக்கி சேர்க்க வேண்டும்.

அதனுடன் உப்பு, மளகு தூள், சேர்க்க வேண்டும். இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் அதில் இரண்டு ஸ்பூன் கோதுமை மா போட்டு நன்றாக கலக்க வேண்டும்.

விருந்தாளிகளை மகிழ்விக்கணுமா? 3 முட்டை 1 உருளைக்கிழங்கு இருந்தா போதும் | Just Mix 3 Eggs And Potatoes Healthy Food Recipe

பின்னர் கேக் செய்யும் தட்டில் ஒரு ஒயில் பேப்பர் போட்டு அதில் இந்த கவையை போட்டு நன்றாக பரப்பி 180 செல்சியசில் 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்க வேண்டும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கொடை மிளகாய் எலும்பில்லாத சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி நன்றாக வதக்க வேண்டும்.

இதனுடன் இரண்டு பல் பூண்டு மிளகு தூள் மற்றும் சீஸ் துருவி சேர்க்க வேண்டும். இதில் சீஸ் கரையும் வரை நன்றாக வதக்க வேண்டும்.

விருந்தாளிகளை மகிழ்விக்கணுமா? 3 முட்டை 1 உருளைக்கிழங்கு இருந்தா போதும் | Just Mix 3 Eggs And Potatoes Healthy Food Recipe

பின்னர் அதை இறக்கி வைத்து விட்டு பேக் செய்த உருளைக்கிழங்கு முட்டையை எடுத்து அதில் வதக்கிய இந்த சிக்கன் கலவையை அதற்குள் வைத்து உருட்ட வேண்டும்.

பின்னர் அதன் மேல் சீஸ்தூவி பேக் செய்து எடுக்க வேண்டும். அவ்வளவுதான் சுவையான உருளைக்கிழங்கு முட்டை செரிபி தயார். இதை நீங்கள் காலை உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம் குழந்தைகளுக்கு பாடசாலைக்கும் கொடுத்து அனுப்பலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker