ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும்

பொதுவாக பெண்களாக பிறந்த அனைவருக்குமே தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் ஒரு அலாதி இன்பம் இருக்கும் என்றால் மிகையாகாது.

சில பெண்கள் தங்களில் அழகை மேம்படுத்துவதற்காக எவ்வளவு பணத்தையும் நேரத்தையும் வேண்டுமானாலும் செலவிட தயாராக இருப்பார்கள்.

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும் | How To Improve Eyebrow Growth At Home

ஆனால் பெண்களின் அழகை இயற்கையாகவே மேம்படுத்தி காட்டுவதில் புருவங்கள் முக்கிய இடம் வகிக்கின்றது. புருவங்கள் எந்தளவுக்கு அடத்தியாகவும் நேர்த்தியாகவும் காணப்படுகின்றது.

அவ்வளவுக்கு பெண்களின் முக அழகில் மாற்றத்தை ஏற்படுத்தும். பெண்களின் புருவம் வில் போன்ற அமைப்பில் அடர்தியாக அழகாக இருந்தால், சுமாராக காணப்படும் பெண்கள் கூட மிகவும் நேர்த்தியாகவும் அழகாகவும் தெரிவார்கள்.

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும் | How To Improve Eyebrow Growth At Home

பெண்களின் கண்கள் எவ்வளவு அழகாக இருந்தாலும் புருவம் சரியாக இல்லையென்றால், அது கண்களின் அழகையே கெடுத்துவிடும். வெறும் ஒரு வாரத்தில் புருவங்களை அடர்த்தியாக்கும் சில விட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஆயில் மசாஜ் செய்வது முடி வளர்ச்சிக்கு பெரிதும் துணைப்புரியும். இது மயிர் கால்களில் இரத்த ஓட்டங்களை அதிகரிக்க செய்யும். புருவங்களை மசாஜ் செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் அதிகரித்து முடி வளர்ச்சியும் வேகமாக இருக்கும்.

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும் | How To Improve Eyebrow Growth At Home

சுத்தமான தேங்காய் எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் கொண்டு தினசரி இரவில் படுக்கைக்கு  செல்லும் முன்னர் புருவங்களில் மசாஜ் செய்து வந்தால், வெறும் 7 நாட்களிலேயே அடத்தியான புருவங்களை பெறலாம்.

அல்லது  ஆலிவ் எண்ணெய், தேயிலைமர எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் என மூன்று எண்ணெய்களில் ஒன்றை தொடர்ந்து புருவத்தில் தடவி விரல்களால் நன்கு மசாஜ் செய்து வந்தால் மெல்லிய புருவங்களை  இயற்கையாகவே அடர்த்தியாக்கலாம்.

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும் | How To Improve Eyebrow Growth At Home

வெங்காயச்சாற்றில் சல்பர், செலினியம், வைட்டமின் சி மற்றும் பி ஆகியன செரிந்து காணப்படுவதால், முடிவளர்ச்சியை தூண்டும்.

புருவங்கள் விரைவில் அடர்த்தியாக வேண்டும் என்றால், வெங்காய சாற்றை புருவங்களில் தடவி  தினசரி ஒரு 5 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்துவர விரைவில் புருவங்கள் அடர்த்தியாக மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்

வெறும் 7 நாட்களில் புருவங்கள் அடர்த்தியாக வேண்டுமா? இந்த பொருட்களில் ஒன்னு போதும் | How To Improve Eyebrow Growth At Home

புருவங்களை அடர்தியாகவும் மென்மையாகவும் மாற்றுவதில் பால் முக்கிய பங்கு வகிக்கின்றது. இது கேசீன் மற்றும் மோர் என்னும் இரண்டு புரதங்களை கொண்டுள்ளது. இது முடி வளர்ச்சியை தூண்டுகின்றன. தினமும் சிறிதளவு பாலை கொண்டு புருவங்களை மசாஜ் செய்து வந்தால் அடர்ந்த புருவங்களை பெறலாம்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker