ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்புதியவை

மென்மையான பஞ்சுபோன்ற காய்கறி இட்லி செய்யணுமா? இதை மாவில் சேருங்க போதும்

இட்லி பஞ்சுபோல வரவேண்டும் என்றால் அதற்கு நாம் சில பொருட்களை  மாவில் சேர்க்க வேண்டும்.

காய்கறி இட்லி என்பது புளித்த  மாவு மற்றும் புதிய காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஒரு ஆரோக்கியமான தென்னிந்திய காலை உணவாகும். இந்த உணவு குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருவருக்கும் ஏற்றது.

இந்த இட்லியை மென்மையாக செய்ய தான் எல்லோரும் ஆசைப்படுவார்கள். அற்கான டிப்ஸ் சிலருக்கு தெரியாமல் இருக்கும். அதை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறொம்.

தேவையான பொருட்கள்

  • 2 கப் இட்லி மாவு /  ரவை
  • ½கப் துருவிய கேரட்
  • ½கப் நறுக்கிய பீன்ஸ் & குடமிளகாய் 4 கப் (விருப்பப்பட்டால்)
  • பச்சை பட்டாணி 2 டேபிள்ஸ்பூன்
  • கொத்தமல்லி இலைகள் தேவையான அளவு
  • உப்பு எண்ணெய்/நெய்

மென்மையான பஞ்சுபோன்ற காய்கறி இட்லி செய்யணுமா? இதை மாவில் சேருங்க போதும் | Soft And Fluffy Vegetable Idli Ingredients Food

செய்யும் முறை

முதலில் படி 1 கேரட், பீன்ஸ், பட்டாணி, குடைமிளகாய் போன்ற காய்கறிகளைக் கழுவி, நறுக்கி, சிறிது நேரம் மென்மையாகும் வரை லேசாக வேகவைக்கவும்.

பின்னர் இட்லி மாவில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இட்லி மாவு செய்யும் போது உளுந்திற்கு பதில் ரவை சேர்த்தால் இட்லி மென்மையாக வரும்.

மென்மையான பஞ்சுபோன்ற காய்கறி இட்லி செய்யணுமா? இதை மாவில் சேருங்க போதும் | Soft And Fluffy Vegetable Idli Ingredients Food

பின்னர் நாம் வழமையாக பயன்படுத்தும் இட்லி அச்சுகளில் எண்ணெய் அல்லது நெய் தடவி, காய்கறி-மாவு கலவையை ஒவ்வொரு அச்சுகளிலும் நிரம்பும் வரை ஊற்றவும்.

இதை ஒரு 10 நிமிடங்கள் அப்படியே வேக வைக்க வேண்டும். இதன் பின்னர் சாப்பிடும் தட்டுக்களில் எடுத்து சட்னி சாம்பாருடன் சேர்த்து சாப்பிட்டால் வாயில் கரைந்து சுவை தரும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker