ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க

முகப்பொலிவு பெற விலையுயர்ந்த  காபி தூள் செய்யும் மாயம் பற்றி இந்த பதிவை படித்ததன் பின்னர் அறிந்துகொள்ளுங்கள்.

கோடைவெயிலில் சருமம் பாதிக்கப்படுவது சாதாரணம். அதனால் கரும்புள்ளிகள், கருமை படலம் போன்ற பிரச்சனைகள் முகத்தில் தெரிய தொடங்கும்.

ஆனால், இந்த பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே ஒரு தீர்வு உள்ளது.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

காபி தூளுடன் மஞ்சள், தக்காளி சாறு மற்றும் தேன் ஆகிய இயற்கை பொருட்களை இணைத்து தயாரிக்கும் ஒரு ஃபேஸ் பேக், உங்கள் முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நன்கு குறைத்து, ஒளிரும், சீரான தோற்றத்தை வழங்குகிறது.

செய்யும் முறை

காபி தூள், மஞ்சள் தூள், தக்காளி சாறு, மற்றும் தேன் ஆகியவற்றை சம அளவில் சேர்த்து பேஸ்ட் போன்று தயார் செய்து கொள்ளலாம். இந்த கலவையை முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி, சுமார் 15 நிமிடங்கள் உலர விட வேண்டும்.

அதன் பிறகு குளிர்ந்த நீரில் மெதுவாக கழுவுவதால், முகத்தின் கருமை குறைந்து, இயற்கையான ஒளி ஏற்படும்.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் இருமுறை பயன்படுத்துவதன் மூலம், கரும்புள்ளிகள் குறையும் முகம் ஒளிரும் தோல் சீராகவும் மென்மையாகவும் மாறும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தவிர இன்னும் சில வழிகழ் மூலமும் கோப்பி தூளை முகத்திற்கு பயன்படுத்தலாம்

1. கோப்பி + தேன் (Glowing Face Pack): 1 தேக்கரண்டி கோப்பி தூள் 1 தேக்கரண்டி தேன்  கலந்து முகத்தில் தடவவும், 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளபளக்கும், இயற்கையான ஒளி போன்ற சருமம் கிடைக்கும்.

2. கோப்பி + ஆலிவ் ஆயில் (Hydration Pack): 1 தேக்கரண்டி கோப்பி 1/2 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் முகத்தில் தடவி, 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் உலர்ந்த சருமம் கிடைப்பதோடு சருமத்திற்கு நன்கு ஈரப்பதம் கிடைக்கும்.

முகப்பொலிவு பெற காபி தூளில் இந்த 3 பொருள் சேர்த்து பூசுங்க | Mix Three Ingredients Coffee Get A Glowing Face

3. கோப்பி + எலுமிச்சை சாறு (Brightening Pack): 1 தேக்கரண்டி கோப்பி 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு  தடவி 10 நிமிடங்கள் விட்டு கழுவவும். இது முகத்தில் உள்ள தடங்களை குறைக்கும்.  ஆனால் ஒவ்வாமை உள்ளவர்கள் சிறிது தயிர் சேர்த்துக் கொள்ளவது நல்லது.

2. கோப்பி + தக்காளி சாறு (Pigmentation Control): 1 தேக்கரண்டி கோப்பி தூள் 1 தேக்கரண்டி தக்காளி சாறு  முகத்தில் தடவவும், இதை 10 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனால் கரும்புள்ளிகள், பிக்மென்டேஷன் குறையும்.

முகத்திற்கான கோப்பி தூள் பயன்கள்

  • முகத்தை இயற்கையாக ஒளிரச் செய்யும்
  • கரும்புள்ளிகளை குறைக்கும்
  • இறந்த செல்களை அகற்றும் (Exfoliation)
  • சுருக்கங்களைத் தடுத்து, மென்மையூட்டும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சி தரும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker