அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவை

செம்பருத்தி இலையுடன் இத கொஞ்சமா அரைச்சு போடுங்க.. காடு மாதிரி தலைமுடி வளரும்!

இளைஞர்களுக்கு மத்தியில் நாளுக்கு நாள் தலைமுடி உதிர்வு பிரச்சனை அதிகமாகி வருகின்றது. இந்த பிரச்சினையை சரிச் செய்வதற்காக பலர் மருத்துவர்களை தேடிக் கொண்டிருக்கிறார்கள்

தலைமுடி பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க நினைப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வீட்டு வைத்தியங்களை செய்து பார்க்கலாம்.

ஆங்கில மருத்துவத்தின்படி, நோய்களை தற்காலிகமாகவே தீர்க்க முடியும். அதே ஆயுள்வேத முறைப்படி தீர்க்க முயற்சித்தால் உடலுக்கு பாதகமாக இல்லாமல் நோய்களை தீர்வுக் கொண்டு வரலாம்.

அப்படியாயின், செம்பருத்தி இலைகளை பயன்படுத்தி தலைமுடி உதிர்வு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். இந்த இலைகளில் ஹேர்பேக் செய்து போட்டு வந்தால் தலைமுடி உதிர்வு நாளடைவில் குறையும் என மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார்.

செம்பருத்தி இலையுடன் இத கொஞ்சமா அரைச்சு போடுங்க.. காடு மாதிரி தலைமுடி வளரும்! | Homemade Hair Pack For Hair Growth In Tamil

ஏனெனின் செம்பருத்தி இலைகளில் வைட்டமின் சி ஊட்டச்சத்து உள்ளது. இது உடலில் உள்ள கொலஜன் உற்பத்தியை அதிகப்படுத்தும். இதனை பயன்படுத்தும் பொழுது சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியமாக இருக்கும்.

அந்த வகையில் இந்த ஹேர்பேக் தயாரிப்பதற்காக இரண்டு கைப்பிடி அளவிற்கு செம்பருத்தி இலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வேறொரு இலை எடுத்து கொள்ள வேண்டும். இந்த இரண்டு இலைகளை வைத்து எப்படி ஹேர்பேக் தயாரிக்கலாம் என பதிவில் பார்க்கலாம்.

செம்பருத்தி இலையுடன் இத கொஞ்சமா அரைச்சு போடுங்க.. காடு மாதிரி தலைமுடி வளரும்! | Homemade Hair Pack For Hair Growth In Tamil

தேவையான பொருட்கள்

  • செவ்வரத்தை இலை- கைபிடி அளவு
  • கறிவேப்பிலை- கைபிடி அளவு
  • சீயக்காய் பவுடர்

செய்முறை

செவ்வரத்தை இலை, கறிவேப்பிலை இரண்டையும் தண்ணீர் கொஞ்சமாக கலந்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த கலவையை தலைக்கு குளிக்கும் முன்னர் உச்சந்தலையில் இருந்து நுனிப்பகுதி வரை தேய்க்கவும். இதனையடுத்து சுமார் 45 நிமிடங்கள் கழித்து சுடுதண்ணீரில் குளிக்க வேண்டும்.

செம்பருத்தி இலையுடன் இத கொஞ்சமா அரைச்சு போடுங்க.. காடு மாதிரி தலைமுடி வளரும்! | Homemade Hair Pack For Hair Growth In Tamil

குளிக்கும் போது சீவக்காய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இந்த பேக்கை வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தலாம். இவ்வாறு தொடர்ச்சியாக செய்து வந்தால் தலைமுடி உதிர்வு பிரச்சனை குறையும்.

தலைமுடியின் வளர்ச்சியும் அடர்த்தியாக இருப்பதை நீங்களே அவதானிக்கலாம். இது மருத்துவரின் பரிந்துரை என்பதால் எந்த பயமும் இல்லாமல் பயன்படுத்தலாம்

இது போன்ற இயற்கையான ஹேர்பேக்கை உபயோகிக்கும் பொழுது தலைமுடி பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker