இந்த நீரில் இனி கழுவுங்க.. முகம் கண்ணாடி மாதிரி ஜொலிக்கும்- சீரத்தை விட சிறந்தது!
அரிசி கழுவிய பின்னர் இருக்கும் நீரைக் கொண்டு முகம் கழுவினால் சருமத்திற்கு இயற்கையான முறையில் பிரகாசம் கிடைக்கும். இதனால் பலரும் இதனை இயற்கையில் கிடைக்கும் டோனர் என்கிறார்கள்.
இதில் உள்ள பி வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி கொடுக்கிறது.
தினமும் காலையும், மாலையும் ஒரு சுத்தமான பஞ்சை அரிசி நீரில் நனைத்து, முகத்தை துடைக்கலாம். இது சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், பருக்கள், மற்றும் தழும்புகளை இல்லாமல் செய்கிறது.
அதே சமயம், சருமத்திலுள்ள நிறத்தையும் மேம்படுத்துகிறது. பொலிவுடன் காட்சியளிக்க செய்யும் இதனை பயன்படுத்தும் பொழுது சரும சேதத்தில் இருந்தும் ஓரளவு பாதுகாப்பு அளிக்கும். அத்துடன் சருமத்தின் pH அளவை சமநிலைப்படுத்தி, சருமம் பார்ப்பதற்கு நீரேற்றமாக இருக்கும்.
கொரியா மற்றும் ஜப்பானிய கலாச்சாரங்களில் பளபளப்பான சருமத்தைப் பெற பல நூற்றாண்டுகளாக அரிசி நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இவ்வளவு சிறப்புக்களை தன்வசம் வைத்திருக்கும் அரிசி கழுவிய நீரில் வேறு என்னென்ன பலன்கள் உள்ளன என்பதை பதிவில் பார்க்கலாம்.
அரிசி நீர் தலைமுடிக்கு ரு சிறந்த கண்டிஷனராக செயல்படும். கெமிக்கல் கலந்த கண்டிஷனர்களுக்கு பதிலாக இந்த நீரை பயன்படுத்தும் பொழுது கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிலும் குறிப்பாக புளிக்கவைத்த அரிசி நீர் (Fermented Rice Water),கூந்தலை மென்மையாக்கும், பளபளக்கச் செய்யும், மற்றும் கூந்தல் உதிர்வதைக் குறைக்கும்.
கூந்தலுக்கு இயற்கையான ஊட்டம் கொடுத்து தலைமுடி உதிர்வை கட்டுக்குள் வைக்கும். அடர்த்தியாக வளர தூண்டும். கூந்தல் நுனியில் ஏற்படும் பிளவுபடும் சிக்கல்களை (split ends)குறைப்பதற்கும் இந்த நீர் உதவியாக இருக்கிறது.
பயன்படுத்தும் முறை
ஷாம்பு போட்டு கூந்தலை அலசிய பிறகு, அரிசி நீரைக் கொண்டு கூந்தலை அலசவும். 5-10 நிமிடங்கள் அப்படியே ஊற வைத்து சுத்தமான நீரில் கழுவினால் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும். இதனை வாரத்திற்கு 2-3 முறை கூட செய்யலாம்.
தாவரங்களுக்கு ஊட்டச்சத்து பானம்:
வீட்டில் செடிகள் இருந்தால் இந்த நீரை ஊற்றலாம். இது இயற்கை உரம், அரிசி நீரில் உள்ள மாவுச்சத்து, நுண்ணூட்டச்சத்துக்கள் (குறிப்பாக நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம்) மற்றும் வைட்டமின்கள் கொடுத்து செடியை நன்கு வளர வைக்கும்.
மண் வளத்தை மேம்படுத்தி, செடிகளில் நோய் தாக்காமல் பாதுகாப்பாக வைக்க உதவியாக இருக்கிறது. மண்புழுக்களின் வளர்ச்சிக்கும் இது துணைபுரியும். இதனால் மண்ணின் காற்றோட்டம் அதிகரித்து, செடிகள் இன்னும் ஆரோக்கியமாக வளரும்.
பயன்பாடு:
அரிசி கழுவிய நீரை அப்படியே உங்கள் வீட்டுத் தோட்டச் செடிகளுக்கு ஊற்றலாம். பூச்செடிகள், காய்கறிச் செடிகள், மரங்கள் என அனைத்திற்கும் ஆரோக்கியம் கொடுத்து நன்கு வளர வைக்கும்.