ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க…

ஆரஞ்சு பழத்தோலை முகத்திற்கு பயன்படுத்தும் முறை மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகப்பரு, கரும்புள்ளி, தழும்புகள் இவற்றினால் கலையிழந்து காணப்படும் முகத்திற்கு ஆரஞ்சு பழ தோல் முக்கிய தீர்வாக அமைகின்றது.

வேலை காரணமாக சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், இளமையிலேயே முதுமையானவர்கள் போன்று தோற்றமளிக்கலாம்.

இத்தகைய தருணத்தில் ஆரஞ்சு பழ தோல் நமது முக அழகிற்கு எவ்வாறு பயன்படுகின்றது என்பதை தெரிந்து கொள்வோம்.

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க... | Beauty Tips For Orange Peel Powder Face Packs

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடியுடன் தேன் மற்றும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பொலிவாக காணப்படும்.

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி மற்றும் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் போலாகி முகத்தில் தடவி ஒரு 15 நிமிடம் வைத்த பின்பு குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் படிந்திருக்கும் தூசி நீக்கி பொலிவாகும். இதனை இரவில் பயன்படுத்தவும்.

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க... | Beauty Tips For Orange Peel Powder Face Packs

 

இதே போன்று ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல், ஒரு ஸ்பூன் முல்தானிமட்டி மற்றும் ரோஸ் வாட்டம் இவற்றினை கேலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து நீக்கினால், அழுக்குகள் நீங்கி சருமம் சுத்தமாகும். வாரத்திற்கு ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை போடலாம்.

சந்தம் மற்றும் வால்நட் பொடியுடன் ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடியையும், இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் கலந்து தடவி 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவினால் நாள் முழுவதும் முகம் பளிச்சென்று இருக்கும்.

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க... | Beauty Tips For Orange Peel Powder Face Packs

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, டீ ட்ரி ஆயில் 2 சொட்டு, ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால், முகப்பரு மற்றும் தழும்புகள் இவற்றிற்கு நல்ல பலனை கொடுக்கும். வாரம் இருமுறை இதனை பயன்படுத்தலாம்.

இந்த ரகசியம் தெரிந்தால் ஆரஞ்சு பழ தோலை தூக்கி போட மாட்டீங்க... | Beauty Tips For Orange Peel Powder Face Packs

ஒரு ஸ்பூன் ஆரஞ்சு பழ தோல் பொடி, இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், அரை ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சர்க்கரை இவற்றுடன் சிறிதளவு தண்ணீர் கலந்து பேஸ்ட் போன்று முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பழபழப்பாக மாறும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker