தோசைக்கு பக்காவா பொருந்தும் ஆனியன் மசாலா… வெறும் பத்தே நிமிடம் போதும்!
பொதுவான வீட்டில் காலை நேர அவசர சமையலுக்கு என்ன செய்யலாம் என்பது இல்லத்தரசிகளுக்கும், வெளியூரில் தங்கியிருந்து வேலை பார்க்கும் நபர்களுக்கு பெரும் சலாலான விடயமாக இருக்கும்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் வெறும் 10 நிமிடத்தில் சப்பாத்தி மற்றும் தோசைக்கு பக்கவாக பொருந்தும் வெங்காய மசாலாவை எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய் – 1
தக்காளி – 1
தயிர் – 3 மேசைக்கரண்டி
இஞ்சி – சிறிதளவு (1 இஞ்சி அளவு)
பூண்டு – 10 அல்லது 12 பல்
கடுகு – ¼ தே.கரண்டி
சீரகம் – ¼ தே.கரண்டி
மஞ்சள் தூள் – ½ தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
மல்லித்தூள் – 1 தே.கரண்டி
கரம் மசாலா – ¼ தே.கரண்டி
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி – சிறிதளவு
கஸ்தூரி மேத்தி – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் தயிர் சிறிதளவு எடுத்து அதனுடன் உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்து கரண்டியால் நன்றாக அடித்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையத்து சின்ன வெங்காயத்தை தோல் உரித்து கழுவி பொடி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பெரிய வெங்காயத்தை நீலவாக்கில் நறுக்கி உரிர்த்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும், இஞ்சியையும் நன்கு மண் இல்லாமல் கழுவி தோலை நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் பூண்டை தோல் உரித்து சுத்தம் செய்து இஞ்சி உடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்பு நன்றாக பழுத்த சிவப்பு தக்காளியை கழுவி காம்பு பகுதியை நீக்கி விட்டு ஒன்றிரண்டாக நறுக்கி, ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து வைத்து கொள்ளவும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் சேர்த்து, நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்நிறமாக வதக்கிக்கொள்ள தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்பு மீதமுள்ள எண்ணெயில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விட்டு, அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அதில் அரைத்து வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசம் போகும் வரையில் நன்றாக வதக்கி, அரைத்து வைத்த தக்காளி சாறு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரையில் கொதிக்க விட வேண்டும்.
அதன் பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலா வாசனை போகும் வரையில் வேகவிட வேண்டும்.
பின்பு அடித்து வைத்த தயிரை சேர்த்து நன்றாக கிளறிவிட்டு சிறிது ண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். நன்றாக கொதித்ததும் வதக்கி வைத்த பெரிய வெங்காயத்தையும் சேர்த்து வேகவிட்டு கெட்டியானதும், கொத்தமல்லி மற்றும் கஸ்தூரி மேத்தி சேர்த்து கிளறி இறக்கினால் அவ்வளவு தான் சுவையான ஆனியன் மசாலா தயார்.