வெறும் 10 நிமிடத்தில் ஆரோக்கியமான காலை உணவு செய்யணுமா? 2 கப் அவல் இருந்தா போதும்
பொதுவாகவே இல்லதரசிகளுக்கு மதிய மற்றும் இரவு உணவு தயாரிப்பதை விடவும் காலை உணவு தயாரிப்பது தான் மிகவும் கடினமானதாக இருக்கும்.
காரணம் காலையில் வேலைக்கு செல்லும் கணவன் மற்றும் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகள் என வீடே பரபரப்ப்பாக இருக்கும் அதிலும் வீட்டில் வயதானவர்கள் இருந்தல் அவர்களுக்கு தேவையானதையும் செய்து கொடுக்க வேண்டும்.
இந்த கலவரத்தில் மாட்டிக்கொள்ளும் இல்லத்தரசிகள் காலையில் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் சமைப்பதுடன் விரைவாகவும் சமைக்க வேண்டும். எப்படியான நேரத்தில் கைகொடுக்கும் அசத்தல் சுவை அவல் உப்புமாவை எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கெட்டி அவல் – 2 கப்
எண்ணெய் – தேவையான அளவு
வேர்க்கடலை – 1/4 கப்
உளுத்தம் பருப்பு – 2 தே.கரண்டி
கடலைப் பருப்பு – 2 தே.கரண்டி
கடுகு – 1 தே.கரண்டி
சீரகம் – 1 தே.கரண்டி
பெருங்காயத் தூள் – 1 தே.கரண்டி
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 துண்டு (துருவியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 3 (அரைத்தது)
மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – 2 தே.கரண்டி
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது
நெய் – 1 தே.கரண்டி
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் அவலை எடுத்து, அதனை தண்ணீரில் இரண்டு முறை கழுவிவிட்டு முற்றிலும் வடிகட்டி தனியாக ஒரு தட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேர்க்கடலையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதே பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம், பெருங்காயத் தூள் ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக நிறம் மாறும் வரையில் வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் அதனுடன் அரைத்த தக்காளியை ஊற்றி 3 நிமிடங்கள் வரையில் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வத்ககிக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து கழுவி வைத்துள்ள அவலை சேர்த்து கிளறி, நீர் வற்றியதும், அதில் வறுத்து வைத்துள்ள வேர்க்கடலை மற்றும் நறுக்கிய கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும். இறுதியாக 1 டீஸ்பூன் நெய்யை சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால், அவ்வளவு தான் சுவையான தக்காளி அவல் உப்புமா தயார்.