நாவூரவைக்கும் அசத்தல் சுவையில் வற்றல் கலவை குழம்பு… எப்படி செய்வது?
மனித பிறவியாக பிறந்ததன் சிறப்புகளில் மிக முக்கியதானது என்றால், அது நாம் விரும்பும் சுவையில் உணவுகளை சாப்பிடுவது தான். இது பெரும் பாக்கியம் என்றால் மிகையாகாது.
பொதுவாகவே அனைவருக்கும் விதவிமான சமைத்து சாப்பிடுவதில் அலாதி இன்பம் இருக்கும். அப்படி சற்று வித்தியாசமான முறையில் நாவூரும் சுவையில் கலவை வற்றல் குழம்பு எப்படி செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வற்றல் கத்தரிக்காய் வற்றல் மணத்தக்காளி போன்ற வற்றல் வகைகள் – தலா ஒரு கைப்பிடி
நாட்டுத் தக்காளி – 2
சின்ன வெங்காயம் – 15
மஞ்சள் தூள்- 1/4 தே.கரண்டி
மிளகாய் தூள் – தேவையான அளவு
கொத்துமல்லித்தூள்- 1 தே.கரண்டி
புளி- நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகு ,சீரகம், கடலை பருப்பு – தலா 1 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 தே.கரண்டி
கடுகு – 1/4 தே.கரண்டி
கருவேப்பிலை சிறிது
காய்ந்த மிளகாய் – 2
செய்முறை
முதலில் புளியை ஒரு கிண்ணத்தில் ஊற வைத்து, தூசு போக வடிகட்டி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிளகு சீரகம் கடலைப்பருப்பு வெந்தயம் எள்ளு ஆகியவற்றை மிதமான தீயில் வைத்து சிவக்க வறுத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அடி கனமான ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய்விட்டு சூடானதும், கடுகு கறிவேப்பிலை வரமிளகாய் போட்டுத் தாளித்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து வற்றல் வகைகளை ஒவ்வொன்றாகப் போட்டு கருகி விடாமல் பதமாக வறுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் தோலுரித்த முழு சின்ன வெங்காயம் மற்றும் நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கி,அதனுடன் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் கொத்து மல்லித்தூள் எல்லாவற்றையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு நன்றான வற்றி கெட்டிப்படும் போது, புளிக் கரைசலை ஊற்றி தேவையான அளவு உப்பு சேத்து கொதிக்கவிட வேண்டும்.
குழம்பு வற்றி எண்ணெய் பிரிந்து வந்ததும் ,வறுத்தப் பொடியை சேர்த்து கிளறி இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவைலயில் ஆரோக்கியம் நிறைந்த வற்றல் கலவை குழம்பு தயார்.