ஆரோக்கியம்உறவுகள்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

அசத்தல் சுவையில் முட்டை மிளகு வறுவல்… இப்படி ஒரு முறை செய்து பாருங்க

பொதுவாக அவித்த முட்டை, ஆம்லெட், ஆஃபாயில், கலக்கி, பொரியல் என பல்வேறு முறையில் சமைக்கப்படும்  முட்டை, சுவையான உணவு மட்டுமல்ல, சத்தான உணவாகவும் இருக்கிறது.

நம் உடலுக்கு அத்தியாவசிய தேவைகளாக உள்ள புரதச் சத்தும், ஊட்டச்சத்துக்களும் முட்டையில் நிறைவாக உள்ளன.

egg pepper fry: அசத்தல் சுவையில் முட்டை மிளகு வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Pepper Fry Recipe In Tamilஉடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நபர்கள் தினசரி உணவில் முட்மையை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

கூந்தல் வளர்ச்சி முதல் இதய ஆரோக்கியம் வரையில் முட்டையின் பங்கு உடல் ஆரோக்கியத்தில் இன்றியமையாதது.

egg pepper fry: அசத்தல் சுவையில் முட்டை மிளகு வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Pepper Fry Recipe In Tamil

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முட்டை பெப்பர் வறுவலை எப்படி எளிமையாகவும் சுவையாகவும் செய்வதென்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

முட்டை – 5

உப்பு – 1 தே.கரண்டி

கரம் மசாலா – 1 தே.கரண்டி

மிளகுத் தூள் – 1 தே.கரண்டி

தாளிப்பதற்கு

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

கறிவேப்பிலை – 1 கொத்து

உப்பு – 1 தே.கரண்டி

egg pepper fry: அசத்தல் சுவையில் முட்டை மிளகு வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Pepper Fry Recipe In Tamilசெய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில்  முட்டைகளை உடைத்து ஊற்றி, அத்துடன் உப்பு, கரம் மசாலா மற்றும் மிளகுத் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி, அதில் இந்த முட்டை கலவையை ஊற்றி, ஒரு இட்லி பாத்திரத்தில் இந்த கிண்ணத்தை வைத்து மூடி, 15 நிமிடங்கள் வரையில் நன்றாக வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

egg pepper fry: அசத்தல் சுவையில் முட்டை மிளகு வறுவல்... இப்படி ஒரு முறை செய்து பாருங்க | Egg Pepper Fry Recipe In Tamil

முட்டை ஆறியதும், அதனை சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் சோம்பு, சீரகம், மிளகு, மல்லி விதைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பின் அத்துடன் முந்திரி, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, பிரியாணி இலை, பட்டை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கறிவேப்பிலை சேர்த்து, பின் துண்டுகளாக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து 2 நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.

இறுதியாக அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து, 1 டீஸ்பூன் உப்பு தூவி நன்றாக  2 நிமிடங்கள் கிளறிவிட்டு இறக்கினால், சுவையான முட்டை பெப்பர் ப்ரை தயார் .

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker