ஆரோக்கியம்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

தோசைக் கல்லில் கிழியாம பேப்பர் மாதிரி தோசை வரணுமா? இதை மட்டும் செய்தால் போதும்

தோசை கல்லில் தோசை வராமல் அடிக்கடி ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கு சில வழிமுறைகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

தென்னிந்தியாவின் பிரபலமான காலை உணவாக இருப்பது இட்லி தோசை தான். இட்லியை விட தோசையை தான் பலரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

ஆனால் காலையில் அவசர அவசரமாக தோசை சுட்டுக் கொண்டிருக்கும் போது தோசையானது தோசை கல்லில் ஒட்டிக்கொண்டு பிய்ந்து போய்விடும்.

அவ்வாறு தோசை சுடும் போது கிழியாமல் பேப்பர் போன்று வருவதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

தோசைக் கல்லில் கிழியாம பேப்பர் மாதிரி தோசை வரணுமா? இதை மட்டும் செய்தால் போதும் | Avoid Dosa Sticking To Iron Tawaபுதிதாக வாங்கியுள்ள தோசை கல்லின் அழுக்குகளை அகற்றுவதற்கு தேங்காய் நார் அல்லது காட்டன் துணி கொண்டு சுத்தம் செய்யவும். இரும்பு ஸ்க்ரப்பர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டாம்.

பின்பு சோப்பு அல்லது லிக்யூடு போட்டு சுத்தம் செய்து கொள்ளலாம். பின்பு தோசை கல்லை அடுப்பில் வைத்து நன்றாக சூடு படுத்தவும்.

அதில் சிறிதளவு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி, கல்லியன் மேமல் வெற்றிலையை போடவும்.

தோசைக் கல்லில் கிழியாம பேப்பர் மாதிரி தோசை வரணுமா? இதை மட்டும் செய்தால் போதும் | Avoid Dosa Sticking To Iron Tawa

அந்த எண்ணெயில் வெற்றிலை நன்றாக சூடானது மற்றொரு வெற்றிலையையும் போடவும். இப்போது ஒரு ஸ்பூன் கொண்டு வெற்றிலையை தோசை கல்லில் எல்லா இடத்திலும் நன்றாக தேய்த்துக் கொள்ளுங்கள்.

ஐந்து நிமிடம் அப்படியே வைத்துவிட்டு, பிறகு அந்த எண்ணெயை துடைத்து விட்டு இப்போது நீங்க தோசை சுட ஆரம்பிக்கலாம்.

வெற்றிலை இல்லையெனில் வாழையிலையினைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பழைய தோசைக்கல்லின் துருவை அகற்றுவதற்கு முதலில் தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடாக்கி, அதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றவும்.

பின்பு உப்பு, எலுமிச்சை அல்லது வினிகர் ஏதாவது ஒன்றினை போட்டு தேய்க்கவும். பின்பு தோசைக்கல்லை கழுவி ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கி சிறிதளது எண்ணெய்யை கல்லில் சேர்த்து வெங்காயத்தை கொண்டு கல் முழுவதும் தேய்க்க வேண்டும்.

வெங்காயம் இல்லையெனில் கத்தரிக்காயை கூட பயன்படுத்தலாம். இப்பொழுது தோசை நன்றாக வரும்.

தோசைக் கல்லில் கிழியாம பேப்பர் மாதிரி தோசை வரணுமா? இதை மட்டும் செய்தால் போதும் | Avoid Dosa Sticking To Iron Tawa

சிறிய காட்டன் துணியில் கொஞ்சமாக புளி சேர்த்து, அத்துணியை எண்ணெய்யில் நனைத்து தோசை கல் முழுவதும் நன்றாக தேய்த்துக் கொள்ளவும்.

முக்கியமாக எல்லா இடங்களிலும் படும்படி நன்கு தடவிய பின்பு, கல்லை கழுவி கல் காய்ந்ததும் அதில் புளி கலந்து எண்ணெயை மீண்டும் தடவ வேண்டும்.

பின்பு வெங்காயத்தை கொண்டு தோசை கல் முழுவதும் தேய்த்து விடவும். தற்போது கல்லில் ஒட்டாமல் தோசை நன்றாக வரும்.முக்கியமாக நீங்கள் எப்போது தோசை சுட்டாலும் தீயை அதிகமாக வைக்காமல் மிதமான சூட்டில் வைத்து தோசை சுடுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker