சர்வதேச பாராட்டை பெற்ற காலை உணவு: ஒரு கப் அரிசி மற்றும் பால் இருந்தால் போதும்
இலங்கையின் பாரம்பரிய உணவாக இருப்பது இந்த பாற்ச்சோறு தான். இதை செய்வது சுலபம். ஆனால் சுவை பிரமாதமாக இருக்கும். இதற்கு வீட்டில் அரிசி மற்றும் தேங்காய் பால் இருந்தால் போதும்.
கடந்த வருடம் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சாவிந்திரி பெரேரா என்பவர் சமையல் போட்டியான மாஸ்டர்செஃப் அவுஸ்திரேலியாவில் இலங்கையின் பாரம்பரிய உணவான பாற்சோறை சமைத்து பாராட்டுப் பெற்றுள்ளார்.
தற்போது இது உலக மக்கள் பலராலும் விரும்பப்பட்டு உண்ணப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது. இதற்கான ரெசிபியை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இடி சம்பல் செய்ய
- சின்ன வெங்காயம் 20
- வர மிளகாய் 4 டீஸ்பூன் அரைத்தது
- Maltive Fish 15 கிராம்
- உப்பு தேவையான அளவு
- Lemon juice 2 டீஸ்பூன்
பாற்ச்சோறு செய்ய
- அரிசி 250 கிராம்
- தேங்காய் பால் 250 மி.லீ
- உப்பு தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு உரலை எடுத்து அதில் சின்னவெங்காயம், வர மிளகாய் அரைத்தது, Maltive Fish, உப்பு, Lemon juice போட்டு நன்றாக இடித்துக்கொள்ள வேண்டும். அதை நன்றாக கலந்துவிட்டு தனியாக ஒரு பாத்திரத்தித்தில் எடுத்து வைக்க வேண்டும்.
பின்னர் அரிசியை நன்றாக கழுவி ஒரு 15 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும். பின் ஊறவைத்த அரிசியை வடிகட்டிவிட்டு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அந்த அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து வேக வைக்க வேண்டும்.
அரிசி நன்றாக வெந்து வந்ததும் நல்ல கெட்டியான தேங்காய் பாலை அதில் சேர்த்து அடுப்பில் குறைவான தீ வைத்து கிண்ட வேண்டும். பின்னர் பால் சாதத்ததுடன் சேர்ந்து வந்ததும் அதை இன்னுமொரு பாத்திரத்தில் போட்டு 15 நிமிடமங்கள் அப்படியே வைக்க வேண்டும் .
பின்னர் உங்களுக்கு பிடித்த வடிவத்தில் இதை வெட்டி இடித்த சம்பலுடன் வைத்து சாப்பிட்டால் ஆரோக்கியமான காலை உணவு தயார். இதை குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் சாப்பிடலாம்.