வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இதை மட்டும் செய்திடுங்க
ஆரோக்கியமான வாழ்விற்கு தினசரி செய்ய வேண்டிய முக்கிய விஷயஙகள் என்னென்ன என்பதை இப்போது பார்ப்போம்
மனிதர்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு மிகவும் முக்கியமாக இருக்கின்றது. ஆனால் இன்றைய காலத்தில் உணவுப்பழக்கங்கள் அனைத்தும் மாறியுள்ளது.
அவசரமாக பணிக்கு செல்பவர்கள் காலை உணவை எடுத்துக் கொள்வதில்லை. அதே போன்று ஆரோக்கியம் இல்லாத உணவினை எடுத்துக் கொண்டு பல நோய்கள் தாக்கத்திற்கு ஆளாகிறார்கள்.
துரித உணவுகளான பீட்சா, பர்க்கர், பொரித்த உணவுகள், சாட் உணவுகள் இவற்றிற்கு அடிமையாவதுடன், இதனை அடிக்கடி சாப்பிடவும் செய்கின்றனர்.
இதனால் ஆரோக்கிய உணவுகளை மறந்து வாழ்நாள் முழுவதும் நோயின் தாக்கத்திற்கு ஆளாகின்றனர். தற்போது வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ்வதற்கு எந்தமாதிரியான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலையில் 5, 6 பாதாம் மற்றும் 2 வால்நட்ஸ் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மை அளிக்கும். இதே போன்று கொலாஜன் சப்ளிமெண்ட் சருமத்திற்று ஆரொக்கியத்தை அளிக்கின்றது.
பாஸ்த்ரிகா பிராணயாமா சருமத்திற்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரிக்க உதவும். தினமும் 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
தினமும் 30 நிமிடங்கள் நடக்கவும், வாரத்தில் 2-3 முறை வலிமையான பயிற்சி மற்றும் யோகா மேற்கொள்ளவும்.
இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் முதுமையிலும் இளமையாகவும், உற்சாகமாகவும் வாழ்வதுடன், நோய் தாக்கத்திலிருந்தும் தப்பிக்கலாம்.