ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்புதியவை

மணக்க மணக்க கேரளா பாணியில் மீன் குழம்பு இப்படி செய்தால் எப்படி இருக்கும்..

மீன் குழம்பு என்றால் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். மீன் குழம்பை பிடிக்காதவர்கள் இருக்க முடியாது. ஒரு இடத்திற்கு ஏற்ற வகையில் உணவுகள் வித விதமாக செய்யப்படுகின்றன.

கேரளாவில் எல்லா உணவுகளும் ஒவ்வொரு விதமாக செய்யப்படுகின்றன. இங்கே செய்யப்படும் மீன் குழம்பிற்கு தனி சுவையாளர்களே உள்ளனர். அப்படியான சுவை நிறைந்த மீன் குழம்பை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இது சூடான சாதத்திற்கு வைத்து சாப்பிடலாம்.

மணக்க மணக்க கேரளா பாணியில் மீன் குழம்பு இப்படி செய்தால் எப்படி இருக்கும்? | Kerala Style Fish Kulambu Ingredients Recipe

தேவையான பொருட்கள்

  • மீன் – 1 கிலோ
  • எண்ணெய் – 4 ஸ்பூன்
  • வெங்காயம் – 3
  • தக்காளி – 2
  • பச்சை மிளகாய் – 3
  • மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  • மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
  • கொத்தமல்லித் தூள் – 1 ஸ்பூன்
  • இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • கடுகு – ½ ஸ்பூன்
  • உளுந்து – ¼ ஸ்பூன்
  • கறிவேப்பிலை – ஒரு கொத்து
  • கொத்தமல்லி இலை – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • புளி – நெல்லிக்காய் அளவு

செய்முறை

உங்களுக்கு பிடித்த  மீனை எடுத்து சுத்தம் செய்து தனியாக எடுத்து வைக்கவும். அடுப்பில் பாத்திரத்தை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் விடவும். பின்னர்  அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

மணக்க மணக்க கேரளா பாணியில் மீன் குழம்பு இப்படி செய்தால் எப்படி இருக்கும்? | Kerala Style Fish Kulambu Ingredients Recipeபின்னர் இதில் தக்காளி துண்டுகள், பச்சை மிளகாய் துண்டுகளையும் போட்டு வதக்கவும். அவை நன்கு வதங்கியதும், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லித் தூள் சேர்த்து வதக்கவும். இந்த கலவையை எடுத்து தனியாக வைக்கவும். அடுப்பை அணைக்கவும்.

வெங்காய கலவை நன்கு ஆறியதும், மிக்ஸியில் போட்டு மையாக  அரைக்கவும். பின்னர் அடுப்பில் இன்னுமொரு பாத்திரத்தை வைத்து, 2 ஸ்பூன் எண்ணெய் விடவும். எண்ணெயில் கடுகு, உளுந்து போட்டு பொரிய விடவும்.

மணக்க மணக்க கேரளா பாணியில் மீன் குழம்பு இப்படி செய்தால் எப்படி இருக்கும்? | Kerala Style Fish Kulambu Ingredients Recipeஅவை பொரிந்ததும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர், முன்பு அரைத்து வைத்த வெங்காயம், தக்காளி மசாலா விழுதை சேர்த்து நன்கு கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கலவையில் தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.

கலவை நன்கு கொதிக்கும் போது, ஊற வைத்த வைத்த புளி கரைசலை சேர்த்து நன்கு கிளறவும். பின்னர், முன்பு வெட்டி வைத்த மீன் துண்டுகளை சேர்க்கவும். மூடி வைத்து வேக விடவும். மீன் வெந்தால் போதும். பின்னர், மூடியை எடுத்து, கொத்தமல்லி இலை தூவி, அடுப்பை அணைக்கவும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் குழம்பு தயார்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker