ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

பொதுவாகவே ஆந்திரா  காரமான உணவுகளுக்கு பெயர் பெற்றது. அங்கு செய்யப்படும் ஒவ்வொரு உணவு வகையிலும் கார சுவை சற்று  தூக்கலாக இருப்பது தான்  அதன் சிறப்பு.

குறிப்பாக, பச்சை மிளகாயை வைத்து செய்யப்படும் சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலம். இட்லி , தேசைக்கு அசத்தல் காம்பினேஷனான இருக்கும்.

Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி | Andhra Style Green Chilli Chutney Recipe In Tamil

ஆந்திரா பாணியில் அனைவரும் விரும்பும் வகையில் பச்சை மிளாய் சட்னியை வெறும் பத்தே நிமிடங்களில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்

எண்ணெய் -1 தே.கரண்டி

வெந்தயம் -1/2 தே.கரண்டி

கடுகு -1 தே.கரண்டி

கருப்பு உளுந்து -1 தே.கரண்டி

கறிவேப்பிலை -1 கொத்து

சீரகம் -1 தே.கரண்டி

காரமான பச்சை மிளகாய் -300 கிராம்

எண்ணெய்(மிளகாய் வறுக்க) -4 – 5 தே.கரண்டி

கெட்டியான புளி சாறு -3 – 4 தே.கரண்டி

வெல்லம் -1 தே.கரண்டி

உப்பு- தேவையான அளவு

Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி | Andhra Style Green Chilli Chutney Recipe In Tamil

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய்  ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் வெந்தியம் சேர்த்து, வெந்தயம் பொன்னிறமாக மாறும் வரையில் வறுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன் உளுந்து, கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை  சேர்த்து நன்றாக வறுத்து, ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி | Andhra Style Green Chilli Chutney Recipe In Tamil

பின்னர் அதே பாத்திரத்தில், எண்ணெயை சூடாக்கி, மிளகாய்களைச் சேர்த்து, அவை மென்மையாக மாறும் வரையில் நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து வதக்கிய மிளகாயைச் மிக்ஸியில் சேர்த்து, புளிச் சாறு, வெல்லம், உப்பு மற்றும் அரைத்த மசாலாவைச் சேர்த்து, தண்ணீர் சேர்க்காமல் சற்று கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்து எடுத்தால் அவ்வளவு தான் காரசாரமாக சட்னி தயார்.

Green Chilli Chutney: ஆந்திரா பாணியில் காரசாரமான பச்சை மிளகாய் சட்னி | Andhra Style Green Chilli Chutney Recipe In Tamil

இந்த சட்னி 3 நாட்கள் வலையில் கொடடுப்போகாது. குளிரூட்டியில் வைத்ததால் 15 நாட்கள் வரையில் புதிது போல் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker