ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம்

உலக புற்றுநோய் தினம் கடந்த பிப்ரவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது.

ஆய்வின் படி, புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

சுரப்பிகளில் உருவாகும் புற்றுநோயானது “அடினோகார்சினோமா” எனப்படும் சளி போன்ற திரவங்களை உருவாக்கும். இதுவே புற்றுநோய்க்கான முக்கிய காரணமாக பாரக்கப்படுகின்றது.

கடந்த 2022 ஆம் ஆண்டில் வெளியான அறிக்கையில், உலகளவில் புகைபிடிக்காதவர்களில் நுரையீரல் புற்றுநோய்களில் 53-70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வகை புற்றுநோய் ஆண்களை விட பெண்களையே அதிகமாக தாக்குகிறது.

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம் | Non Smokers Also Affected In Lung Cancer

அந்த வகையில் நுரையீரல் புற்றுநோய் தொடர்பில், மருத்துவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

அசாதாரண செல்கள் கட்டுப்பாடின்றி வளரத் தொடங்கும் போது நுரையீரலில் புற்றுநோய் ஏற்படுகிறது. இது காலப்போக்கில் கட்டிகளாக வளர்கின்றன.

இது போன்ற பிரச்சினைகள் ஏற்படும் பொழுது, சுவாச பிரச்சினைகள் அதிகமாக இருக்கும். அத்துடன் உடல் பாகங்களுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம் | Non Smokers Also Affected In Lung Cancerபல காரணிகள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் மறைக்கப்பட்ட அபாயங்கள் காரணமாக இது போன்ற புற்றுநோய்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் பெண்களுக்கு அதிகமாக இருக்கின்றது.

1. நுரையீரல் புற்றுநோய் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படலாம். உதாரணமாக, அதிக போக்குவரத்து மற்றும் தொழில்துறை புகை உள்ள நகரங்களில். மாசுபட்ட காற்றை சுவாசித்தல் ஆகிய வழிகளில் ஏற்படும்.

2. சமைக்கும் போது சமையலறையில் சரியான காற்றோட்டம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுவது பெண்களுக்கு அவசியம். இதன் காரணமாகவும் புற்றுநோய் மற்றும் சுவாச பிரச்சினைகள் ஏற்படலாம்.

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம் | Non Smokers Also Affected In Lung Cancer

3. பணியிடத்தில் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் வெளிப்பட்டால் அதுவும் காலப்போக்கில் புற்றுநோய் அபாயத்தை அதிகப்படுத்தும். இதனை பாதுகாக்க முககவசங்கள் அணிவது அவசியம்.

4. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது ஒவ்வொருவருக்கும் அவசியம்.

5. சிலர் கணவர்கள் மற்றும் வீட்டிலுள்ள ஆண்கள் புகைக்கும் பொழுது பக்கத்தில் அமர்ந்து அவர்களின் வேலைகளை பார்த்து கொண்டிருப்பார்கள். அப்படியானவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

புகைப்பழக்கமே இல்லாதவர்களுக்கு அதிகரிக்கும் புற்றுநோய் அபாயம்- ஆய்வின் வெளிச்சம் | Non Smokers Also Affected In Lung Cancer

6. “ரேடான் வாயுக்கள்” நுரையீரல் செயல்பாடுகளை கடுமையாக பாதிக்கும். இதனால் தான் நுரையீரல் புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகமாக உள்ளது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker