அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல்

இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடுவது உடம்பிற்கு நல்லதா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

வாழைப்பழத்தில் பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின்கள், இரும்புச்சத்து, கார்போஹைட்ரேட்டுகள், புரதம் மற்றும் பல வகையான கனிமங்களும் உள்ளது.

நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தில் அதிகளவு கலோரிகளும் உள்ளது. இவை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆனால் வாழைப்பழத்தினை இரவில் சாப்பிட்டால் தீங்கு ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல் | Eat Banana Before Sleeping At Night Good Or Badதூங்கும் முன்பு பலரும் வாழைப்பழம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால் சமீபத்திய ஆய்வில் தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடுவதால், சளி பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

வாழைப்பழம் செரிமானமாவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், சோம்பல் ஏற்படுவதுடன், வளர்சிதை மாற்றத்தையும் குறைக்கின்றது. உடல் பருமனும் அதிகரிக்கின்றதாம்.

தினமும் ஒரு வாழைப்பழம் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். இரவில் சாப்பிடாமல், மாலை வேளையில் சாப்பிடுவது மிகவும் சிறந்ததாகும்.

இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல் | Eat Banana Before Sleeping At Night Good Or Bad

இரவில் சாப்பிட்டால் சளி பிரச்சனை ஏற்படும் என்றாலும் இதிலுள்ள பொட்டாசியம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவுகின்றது.

மேலும் நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றுப்புண் பிரச்சனையையும் குறைக்கின்றது.

இரவு உணவு எடுத்துக் கொள்ளாமல் ஒரு டம்ளர் பால் மற்றும் வாழைப்பழம் இவற்றினை எடுத்துக் கொண்டால் எடையை எளிதில் குறைக்கலாம். ஏனெனில் இதில் 105 கலோரிகள் மட்டுமே உள்ளன.

இரவு தூங்கும் முன்பு வாழைப்பழம் சாப்பிடலாமா? ஆய்வில் வெளியான தகவல் | Eat Banana Before Sleeping At Night Good Or Bad

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker