வீட்டில் வெள்ளை சாதம் இருக்கா? அப்போ இந்த ஆவக்காய் அன்னம் செய்ங்க
உணவுகளுக்கு பெயர் பெற்ற இடம் என்றால் அது ஆந்திரா தான். ஆந்திரா உணவுகள் எல்லாமே காரசாசாரதாக தான் இருக்கும். நமது வாழ்வில் சுவையாக சாப்பாடு சாப்பிடுவது ஒரு தனி சுகம் தான்.
காரசாரமான ஆந்திரா சமையலுக்கே உரிய வகையில் ஆவக்காய் அன்னம் ருசியாக இருக்கும். இதில் பல வகையான மசாலாக்கள் மற்றும் பச்ச மிளகாய் சேர்த்து செய்யப்படுகின்றது.
இதற்கு மிகவும் முக்கியமாக உங்களிடம் ஆவக்காய் ஊறுகாய் இருந்தால் போதும். இந்த பதிவில் ஆவக்காய் அன்னம் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.
ஆவக்காய் அன்னம் செய்ய தேவையானவை
- ஆவக்காய் ஊறுகாய் இரண்டு ஸ்பூன்
- வடித்த சாதம் 750 கிராம்
- வெங்காயம்
- மாங்காய் 50 கிராம்
- நெய் இரண்டு ஸ்பூன்
- வேர்க்கடலை
- துவரம் பருப்பு
- உளுத்தம் பருப்பு ஸ்பூன் உளுத்தம்
- கடுகு ஒரு ஸ்பூன்
- பூண்டு இரண்டு ஸ்பூன்
- பச்சை மிளகாய் இரண்டு
- பெருங்காயம் அரை ஸ்பூன்
- தக்காளி ஒரு
- குண்டு மிளகாய் 4
- கொத்தமல்லி
- நெய் இரண்டு ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்ற வேண்டம். அதில் கடுகு போட்டு கடுகு வெடித்தவுடன் குண்டு மிளகாய், அளவிற்கு பொடிதாக நறுக்கிய பூண்டு, தேவையான அளவு வேர்க்கடலை சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
ஆந்திரா ஆவக்காய் அன்னத்தில் துவரம் பருப்பு பயன்படுத்துகிறார்கள். அடுத்ததாக தேவையான அளவு கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அதனுடன் பெருங்காயம் போடுங்கள். ஏற்கனவே போட்ட உளுந்து நன்கு வறுத்த பிறகு தக்காளியை பொடிதாக நறுக்கி சேர்க்க வேண்டும். தக்காளி வதங்கி பச்சை வாடை போன பின்னர் ஆவக்காய் ஊறுகாய் போட்டு மிக்ஸ் செய்யவும்.
உங்களுக்கு காரம் தேவையென்றால் வடித்த சாதம் போடலாம். காரம் குறைவாக தேவையென்றால் 850-900 கிராம் சாதம் சேர்த்து மிக்ஸ் செய்யவும்.
இறுதியாக நெய் சேர்த்து எலுமிச்சை சாதம் போல் நன்றாக கலக்கி விடவும். மேலே 50 கிராம் மாங்காயை பொடிதாக நறுக்கி கொத்தமல்லியோடு தூவிவிட்டால் சுவையான ஆவக்காய் அன்னம் தயார்.