நிலவை போன்ற ஜொலிக்கும் முகம் வேண்டுமா? இந்த ஒரு ஃபேஸ் பெக் போதும்
தற்போது சருமத்தின் அழகிற்காக பலரும் பல விதத்தில் பணத்தை செலவு செய்கின்றனர். சூரிய ஒளி சருமத்தில் படும்போது அதனால் சருமம் பல விளைவுகளை சந்திக்கிறது.
இதனால் சருமம் அதன் உண்மையான நிறத்தை இழக்கிறது. நம்மை சுற்றியுள்ள இயற்கையான பொருட்களை கொண்டு நமது சருமத்தை அழகுபடுத்த முடியும்.
அந்த வகையில் சருமம் சிவப்பழகு கொரியர்கள் போல கண்ணாடி சருமத்தை பெற என்ன செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
கண்ணாடி சருமத்தை பெற முதலில் அரிசி ஃபேஸ் பெக் தயார் செய்ய வேண்டும். இதற்கு அரை கப் அரிசியை நன்கு கழுவிய பிறகு ஒரு கப் தண்ணீரில் குறைந்தது நான்கு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
இப்படி செய்வதற்கு காரணம் அரிசி அதன் ஊட்டச்சத்துக்கள் மற்றும் நொதிகளை வெளியிடும். பின்னர் இதை வடிகட்டி ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் ஒரு தேக்கரண்டி தயிருடன் சேர்த்து மென்மையான, சீரான பேஸ்ட்டை உருவாக்க வேண்டும்.
பின்னர் இதில் ஒரு டீஸ்பூன் அரிசி பேஸ்டில் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி முகமூடியாக போட வேண்டும். பின்னர் 15-20 நிமிடங்கள் அப்படி யே விட்டு பின்னர் அதை அகற்ற வேண்டும்.
இதற்கு வெதுவெதுப்பான நீரில் முகமூடியைக் கழுவவும், பின்னர், சுத்தமான துண்டுடன் சருமத்தை உலர வைக்கவும். பின்னர் வழக்கமான டோனர் மற்றும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். இப்போது உங்களது முகம் நிலவை போல ஜொலிக்கும்.