ஆரோக்கியம்உறவுகள்எடிட்டர் சாய்ஸ்டிரென்டிங்புதியவைமருத்துவம்

கால் கூச்சம் இருக்கா? அப்போ “இந்த” நோயாக இருக்கலாம்.. சாதாரணமாக விடாதீங்க!

பொதுவாக தற்போது இருக்கும் நவீன உலகில் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாக பார்க்கப்படுகின்றது.

எப்போதும் ஆரோக்கியமாக இருக்க நினைப்பவர்கள் முதலில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்களை கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும். ஏனெனின் உடலில் சத்துக்கள் குறையும் பொழுது ஆரோக்கிய குறைபாடு அதிகரிக்கும்.

வைட்டமின்கள் குறைபாடு இருப்பதை ஒருசில அறிகுறிகள் வைத்து அறியலாம். அப்படி இருப்பவர்கள் ஆரம்பத்தில் சரிச் செய்ய வேண்டும்.

உதாரணமாக வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் கால்களில் சில அறிகுறிகளை காணலாம். இது நாளடைவில் வேறு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

கால் கூச்சம் இருக்கா? அப்போ “இந்த” நோயாக இருக்கலாம்.. சாதாரணமாக விடாதீங்க! | Signs Of Vitamin B12 Deficiency In Feet

 

அந்த வகையில், வைட்டமின் பி12 குறைபாடுடன் கூடிய நோய்களின் அறிகுறிகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.

1. கால்களில் கூச்ச உணர்வை அடிக்கடி சந்திப்பவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு பிரச்சினை இருக்கலாம். ஏனெனின் இந்த வைட்டமின் குறைபாட்டை ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால், அதன் விளைவாக நரம்பு சேதமடையலாம்.

கால் கூச்சம் இருக்கா? அப்போ “இந்த” நோயாக இருக்கலாம்.. சாதாரணமாக விடாதீங்க! | Signs Of Vitamin B12 Deficiency In Feet2. சிலருக்கு எந்தவித காரணமும் இல்லாமல் கால்களில் உள்ள சரும நிறம் மாறும். அதாவது மஞ்சள் நிறமாக மாறும் அல்லது வெளுத்து போனது போன்று இருக்கும். இப்படியான அறிகுறிகள் கண்டால் அது வைட்டமின் பி12 குறைபாடு என அறியலாம். வைட்டமின் பி12 குறைவாக இருந்தால் ஆரோக்கியமான சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதில் பிரச்சினை ஏற்படும். இதன் விளைவாக சருமம் வெளுத்து போகும்.

3. வழக்கத்தை விட மிகுந்த உடல் சோர்வு மற்றும் பலவீனமாக இருப்பது போன்று உணர்ந்தால் நீங்கள் முதல் உங்களின் கால்கள் எப்படி இருக்கிறது என்பதனை அவதானிக்க வேண்டும். கால்களும் வலுவிழந்து இருந்தால் உங்களுக்கு வைட்டமின் பி12 குறைவாக உள்ளது என்று அர்த்தம்.

கால் கூச்சம் இருக்கா? அப்போ “இந்த” நோயாக இருக்கலாம்.. சாதாரணமாக விடாதீங்க! | Signs Of Vitamin B12 Deficiency In Feet

4. விவசாயம் செய்பவர்கள் சிலருக்கு கால்கள் அதிகப்படியான வறட்சியாக இருப்பது போன்று தெரியும். இது அதிகரித்தால் சருமத்தில் வெடிப்புகள் ஏற்படலாம். ஏனெனின் வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படும் பொழுது உடலில் போதுமான நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படாமல் இருக்கும். இதுவே முழு காரணமாக இருக்கும்.

5. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே தடுக்கி விழுவார்கள். இவர்களுக்கு சில சமயங்களில் வைட்டமின் பி12 குறைவாக இருக்கலாம். இதனால் நரம்புகள் சேதமடைந்து இருக்கும். இதுவே தடுக்கி விழுவதற்கு காரணமாக அமைகிறது. இப்படியான அறிகுறிகள் இருந்தால் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளக்கூடாது.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker