ஆரோக்கியம்டிரென்டிங்புதியவைமருத்துவம்

அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரையை எடுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க

பாராசிட்டமால் அடிக்கடி எடுத்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்தைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இன்றைய காலத்தில் சிறிய தலைவலி என்றால் கூட உடனே மாத்திரை எடுத்துக் கொள்பவர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். அதிலும் உடனே நினைவிற்கு வருவது பாராசிட்டமால் அல்லது டோலோ 650 மாத்திரைகள் ஆகும்.

மருந்து கடைகளிலும் மருத்துவர் சீட்டு இல்லாமலேயே இந்த மாத்திரை கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் சாதாரண மக்கள் கூட உடல் மற்றும் தலைவலி ஏற்பட்டால் உடனே இதனை வாங்கி போட்டுவிடுகின்றனர்.

அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரையை எடுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Overtaking Paracetamol Side Effects

கொரோனாவிற்கு பின்பு இந்த பயன்பாடு மக்களிடையே அதிகமாகியுள்ளது. ஆனால் இந்த மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொண்டால், இரத்தத்தில் அதிக அமிலம் சேர்வது, சிறுநீரகப் பிரச்சினைகள், தலைவலி, போதைப் பழக்கம் போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது.

வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேல் பாராசிட்டமாலை எந்த சூழ்நிலையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது.பாராசிட்டமாலை அதிகமாகப் பயன்படுத்துவதால் இதயம் சம்பந்தமான பிரச்சினைகளும் வர வாய்ப்புள்ளது.

அடிக்கடி பாராசிட்டமால் மாத்திரையை எடுக்குறீங்களா? இனி அந்த தவறை செய்யாதீங்க | Overtaking Paracetamol Side Effectsநீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்திய முதியவர்களுக்கு சிறுநீரகம், இதயம், வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் வர வாய்ப்பு அதிகம்.

ஆகவே தலைவலி போன்ற பிரச்சனைக்கு பெரும்பாலும் இயற்கை வழிகளையே பின்பற்ற வேண்டும். தலைவலிக்கு நீர்ச்சத்து குறைபாடும் ஒரு காரணம். மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றைப் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker