ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவைமருத்துவம்

60 வயது கடந்தவர்களா நீங்க? அப்போ “இந்த” விடயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் ஒரு மனிதன் தன்னுடைய ஆறுபது வயதை கடந்தாலே பெரிய சாதனையாக பார்க்கப்படுகின்றத

அதிலும் குறிப்பாக 60 வயதை கடந்தவர்கள் உடல் நலத்தோடு இருந்தால் அவர்கள் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்கள். 60 வயது முதல் 70 வயது வரையிலான வயதில் உள்ளவர்களின் அறிவு வீட்டிலுள்ளவர்களுக்கு நிச்சயம் பயன்படும்.

அறுபது வருட வாழ்க்கை உங்களுக்கு பலவிதமான அனுபவங்களையும் அறிவையும் கொடுத்திருக்கும். எந்த ஒரு கடினமாக சூழ்நிலை வந்தாலும் அதனை சமாளிக்கும் திறன் உங்களிடம் இருக்கும். இதனால் முடிந்தவரை கவலையின்றி மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்வது நல்லது

அந்த வகையில், அறுபது வயதை கடந்தவர்கள் வாழ்க்கையில் என்னென்ன விடயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.60 வயது கடந்தவர்களா நீங்க? அப்போ “இந்த” விடயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Important Things To Follow After The Age Of 60

1. சிலர் 60 வயது என்பதனை மறந்து விட்டு தாங்களும் இளைஞர்கள் தான் என நினைத்து கொண்டு வேகமாக செயற்படுவார்கள். இது அவர்களுக்கு நல்லதொரு மாற்றத்தை கொடுத்தால் உடலளவில் சில ஆரோக்கிய பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். எனவே 60 வயது கடந்தவர்கள் எதிலும் பொறுமையாக இருப்பது சிறந்தது.

2. வீட்டில் குளியலறை முதலான இடங்களில் மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தற்காலத்தில் எப்போதும் போல பரபரப்பாக செயல்பட்டு கவனக்குறைவால் குளியறையில் வழுக்கி விழுதல் போன்ற அபாயங்கள் ஏற்படலாம்.

3. இன்னும் சிலர் அவர்களின் கவனக்குறைவு காரணமாக எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் இருப்பார்கள். இது முதியவர்களுக்கு சிரமத்தை கொடுக்கும்.

60 வயது கடந்தவர்களா நீங்க? அப்போ “இந்த” விடயங்களை அவசியம் தெரிஞ்சிக்கோங்க | Important Things To Follow After The Age Of 604. அறுபது வயது கடந்தவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிக் கொண்டிருந்தவராக இருந்தால் அதைத் தவிர்த்து விடுவது நல்லது. மாறாக கியர் இல்லாத எடை குறைவான ஆட்டோகியர் வாகனங்களை ஓட்டலாம்.

5. வீட்டில் வேலை செய்வேன் எனக் கூறிக் கொண்டு உறுதி இல்லாத இடங்களில் ஏறுவது மற்றும் அந்த பொருட்களின் உதவியுடன் மற்ற மற்ற வேலைகள் செய்வது என்பதனை தவிர்க்க வேண்டும். உதாரணமாக, நாற்காலி, ஸ்டூல் முதலானவற்றின் மீதிருந்து விழுந்து கை கால்களை உடைத்து கொள்ளுதல்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker