இனிப்பான தேனில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்கள்
தேன் மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட ஒரு உணவாகும். இதில் வைட்டமின் பி1, பி2, பி3, பி5, பி6, சி, இ முதலிய வைட்டமின்களும் மற்றும் அயோடின்,
கால்சியம், கந்தகம், இரும்பு, சோடியம், மெக்னீசியம், தாமிரம், குளோரின், பொட்டாசியம், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், உப்பு, குளுகோஸ், லெவுகோஸ், லாக்டிக் அமிலம், டார்டாரிக் ஆஸிட், சிட்ரிக் அமிலம், க்ளாரிக் அமிலம் போன்ற சத்துக்களும் உள்ளன.
தேனை குழந்தைகள் பெரியவர்கள் பாலூட்டும் தாய்மார்கள், என அனைவரும் சாப்பிடலாம். இது இயற்கையாக கிடைக்ககூடிய ஒரு உணவு. தற்போது உள்ள குளிர்காலத்தில் சில நோய்கள் நம்மை அண்டும். இந்த நோய்களை விரட்ட தேனை எப்படி பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் தொற்று நோய்கள் அதிகமாக வரும். இந்த நேரத்தில் காய்ச்சல், சளி, இருமல் போன்றவைக்கு பஞ்சம் இருக்காது. தினமும் உட்கொள்ளும் உணவில் தேனை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தேனில் அதிகமான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இதனால் தொற்று நோய் பாதிப்புகள் ஏற்படாமல் நம்மை கொடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும்.
குளிர்காலத்தில் சளி, இருமல், தொண்டை புண் அல்லது சுவாச பிரச்சனைகளுக்கு இது மருந்தாக உதவும். தேன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பயன்படும்.
தினமும் காலை ஒரு குவளை வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து குடித்து வர வேண்டும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி உடல் வலியால் இருப்பவர்கள் இந்த தேனை தொடர்ந்து உணவில் சேர்ப்பது நன்மை தரும்.
துளசி சாறுடன் தேன் சேர்த்து சாப்பிட்டால் நெஞ்சில் தேங்கியிருக்கும் சளி நீங்கும். இதன்மூலம் நீண்ட நாட்களாக இருந்து வரும் இருமல் பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
தேனை பால், மஞ்சள் தூள், மிளகு தூள் மற்றும் தேன் சேர்த்து தினமும் கடித்து வந்தால் வரட்டு இருமல் இல்லாமல் போகும். இரவில் சரியாக உறக்கம் வரவில்லை என்றால் இரவில் உறங்கச் செல்லும் முன்பாக ஒரு கிளாஸ் பாலில் தேன் கலந்து வெதுவெதுப்பாக அருந்தி வந்தால் நல்ல உறக்கம் கிடைக்கும்.