அசத்தல் சுவையில் பூண்டு மிளகு சிக்கன் வறுவல்… இப்படி ஒரு முறை செய்து பாருங்க
பெரும்பாலானவர்களுக்கு அசைவ உணவுகளை காரசாரமாக சாப்பிடுவது தான் பிடிக்கும். அப்படி பூண்டு மிளகு சேர்த்து அசத்தல் சுவையில் காரசாரமான சிக்கன் வறுவலை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
ஊற வைப்பதற்கு தேவையானவை
சிக்கன் – 1/4 கிலோ கிராம்
மஞ்சள் தூள் – 2 சிட்டிகை அளவு
உப்பு – 1/2 தே.கரண்டி
மிளகுத் தூள் – 1/2 தே.கரண்டி
எலுமிச்சை சாறு – 1 தே.கரண்டி
அரைப்பதற்கு தேவையானவை
மல்லி – 2 தே.கரண்டி
சீரகம் – 1/2 தே.கரண்டி
பட்டை – 3
கிராம்பு – 2
ஏலக்காய் – 1
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பூண்டு – 10-12 பல்
சின்ன வெங்காயம் – 6-7
தாளிப்பதற்கு தேவையானவை
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
பூண்டு – 3 பல் (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – 1 கப்
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து இரண்டு தமவைகள் கழுவி தனியான ஒரு பாத்திரத்தில் எடுத்து ரைவத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து சிக்கனுடன் மஞ்சள் தூள், உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்களுக்கு ஊறவிட வேண்டும்.
பின்னர் மல்லி, சீரகம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை ஒரு மிக்சர் ஜாரில் சேர்த்து நன்றாக கொரகொரப்பான பதத்தில் அரைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து மிளகாய் தூள், பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றையும் சேர்த்து மென்மையாக பேஸ்ட் போன்ற பதத்தில் அரைத்துக் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பொடியாக நறுக்கிய பூண்டு பற்களை சேர்த்து வாசனை வரும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள மசாலாவையும் அதனுடன் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு மூடி வைத்து நன்றாக வேகவிட வேண்டும்.
அதனையடுத்து 1 கப் நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு தூவி மூடி வைத்து 10 நிமிடம் மிதமான தீயில் தண்ணீர் வற்றும் வரையில் வேகவிட வேண்டும்.
இறுதியாக கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், அருமையான சுவையில் பூண்டு மிளகு சிக்கன் வறுவல்