பொடுகு தொல்லை கூடி விட்டதா? அப்போ தயிர் மாஸ்க் போடுங்க
பொதுவாக ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கூந்தலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்து கொள்ள தான் விரும்புவார்கள்.
நாம் விரும்பியபடி தலைமுடி அடர்த்தியாகவும், வலுவாகவும் வளராத பட்சத்தில் அதிலுள்ள குறைகளுக்கு மருந்து தேடுவது வழக்கம்.
உதாரணமாக தலைமுடியை அழகாக வைத்து கொள்ள நினைக்கும் ஒருவர், தலைமுடி உதிர்வை கட்டுபடுத்துவது எப்படி என ஆராய்ந்து கொண்டிருப்பார்கள்.
சந்தையில் கிடைக்கும் கிரீம்கள், ஷாம்பூக்களைப் பயன்படுத்துவதை விட, இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கூந்தலுக்கு பயன்படுத்தினால், கூந்தலில் இருக்கும் பாதிப்பை குறைக்கலாம்.
அப்படியாயின் தலைமுடி ஆரோக்கியத்தை குறைக்கும் பொடுகை எப்படி கட்டுக்குள் வைக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தற்போது இருக்கும் அவசர சூழ்நிலையால் தலைமுடி வறண்டு, உயிரற்றதாக, பொலிவின்றி இருக்க வாய்ப்பு உள்ளது. இப்படி இருக்கும் தலைமுடியை ஈரப்பதனாக்குவது எப்படி என பலரும் சிந்தித்து கொண்டிருப்பார்கள். தினமும் தயிர் சாப்பிடும் ஒருவருக்கு தலைமுடி வறட்சி இருக்காது. மாறாக இவர்களின் தலைமுடி ஆரோக்கியம் பாதுகாக்கப்பட்டிருக்கும்.
தலையில் இருக்கும் பொடுகு பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக தயிர் பார்க்கப்படுகின்றது. ஏனெனின் தலையில் இருக்கும் அரிப்பை குறைத்து ஈரப்பதனை அதிகரிக்கின்றன. தயிரில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் பொடுகு மற்றுமு் பூஞ்சை எதிர்த்து போராடுகின்றது. அத்துடன் அடிக்கடி தயிர் சாப்பிட்டால் உடல் முழுவதும் குளிர்ச்சியாக மாறும்.
அத்துடன் உச்சந்தலையில் இருக்கும் எரிச்சலை குறைக்கின்றது. தவறாமல் தயிர் பயன்படுத்துவதால், உங்கள் உச்சந்தலை ஆரோக்கியமாகவும், பொடுகு இல்லாமலும் பாதுகாக்கலாம். முடிந்தால் தயிர் மாஸ்க் கூட தலைக்கு போடலாம். இதுவும் நல்லதொரு மாற்றத்தை கொடுக்கும்.