குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தயிர் கொடுக்கலாமா.. நிபுணரின் அறிவுரை
பொதுவாக குளிர்காலம் வந்துவிட்டால் குறிப்பிட்ட உணவுகள் குழந்தைகளுக்கு கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனின் குளிர்காலங்களில் நோய் தொற்றுக்கள் எம்மை தாக்குவதற்கு அதிகமான சந்தர்ப்பம் இருக்கும்.
குளிர்காலத்தில் சில குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவதைக் காணக்கூடும். இன்னும் சொல்லப்போனால் குழந்தைகள் இந்த காலப்பகுதியில் தான் அதிகமான மருந்துவில்லைகளை எடுத்துக் கொள்வதாக சொல்லப்படுகின்றது.
சளி, இருமல் மற்றும் பிற சுவாச பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புக்கள் உள்ளன. ஏனெனில் பெரியவர்களை விட குழந்தைகளுக்கு நோயெதிர்ப்பு சக்தி சற்று குறைவாகவே இருக்கும்.
குளிர்காலத்தில் பரவும் வைரஸ்கள் நீண்ட காலம் ஒரு மேற்பரப்பில் உயிருடன் இருக்கும். எனவே குழந்தைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது சவாலான விடயமாக பார்க்கப்படுகின்றது.
அந்த வகையில் குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு குறிப்பிட்ட சில உணவுகளை மறந்தும் கொடுக்கக் கூடாது. அப்படியான உணவுகள் என்னென்ன? அதனை ஏன் கொடுக்கக் கூடாது? என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. குளிர்காலத்தில் குழந்தைகள் கைகளை அவசியம் கழுவ வைக்க வேண்டும். அத்துடன் அவர்கள் தும்மினால் அதனை மறைப்பதற்கு முழங்கை பயன்படுத்த வேண்டும். இதனை மறக்காமல் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும்.
2. அருகில் யாராவது இருமினால் கைகள் கொண்டு வாய் மற்றும் மூக்கை மறைக்க வேண்டும். பொது இடங்களுக்கு குழந்தைகளை கூட்டிச் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிலும் குழந்தைகளுக்கு காய்ச்சல் என்றால் முகக் கவசம் இல்லாமல் வெளியில் அழைத்து செல்லாதீர்கள்.
3. குழந்தைகள் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் போது, வீட்டில் வைத்திருப்பது நல்லது. அத்துடன் குளிர்காலங்களில் ஜாக்கெட், ஸ்வெட்டர், ஸ்கார்ஃப், சாக்ஸ் போன்றவற்றை அணிந்து கொள்வது சிறந்தது.
4. குழந்தைகளுக்கு குளிர்காலங்களில் பழங்கள் மற்றும் தயிர் கொடுக்கலாம். இதுஅவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். அத்துடன் அதிகமான வைட்டமின் சியும் உள்ளது. இது அவர்களின் சருமத்தை பாதுகாக்கிறது. தயிர் கொடுப்பதால் குடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் புரோபயாடிக்குகளின் (probiotics) நல்ல மூலமாக அமைகிறது.
5. உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளை எடுத்து கொள்வது நல்லது.