காலை உணவுக்கு சிறந்தது எது? இந்த உணவுகளை மட்டும் எடுத்துக்காதீங்க
நமது உடல் ஆற்றல் மற்றும் நீண்ட நாள் ஆரோக்கியத்தில் காலை உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது. காலை உணவினை நாம் எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
ஒரு புதிய நாளின் தொடக்கத்திலிருந்து அன்றைய தினம் நாம் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் செயல்பட வேண்டும் என்றால் நாம் காலையில் எடுத்துக் கொள்ளும் உணவு தான் மிக முக்கியம் ஆகும்.
ஆனால் இன்றைய காலத்தில் பெரும்பாலான நபர்கள் அவசர அவசரமாக தங்களது பணிக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், காலை உணவினை தவிர்த்து வருகின்றனர்.
மேலும் காலை உணவானது ஒரு அரசனைப் போன்று அறுசுவை உணவாக நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் இரவு முழுவதும் வெறும்வயிறாக இருக்கும் நமது குடலுக்கு, புதிய நாளில் கொடுக்கும் முதல் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும்.
அதே போன்று புதிய நாளை இனிப்புடன் தொடங்குவதாக நினைத்து, காலை உணவாக இனிப்பு வகைகளை தேர்ந்தெடுப்பது மிகவும் தவறாகும். இது நமது ஆற்றல் மட்டுமின்றி, ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.
மேலும் காலை உணவினை இனிப்பாக எடுத்துக் கொண்டால் ஆற்றல் கிடைப்பதாக நமக்கு தோன்றினாலும், அவை சோர்வாகவும், மேலும் உணவு தேவைப்படுவது போன்ற ஏக்கத்தையும் கொடுப்பதாக ஊட்டச்சத்து நிபுணர் கூறுகின்றனர்.
நாம் எடுத்துக் கொள்ளும் காலை உணவில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்பு இவை நிறைந்ததாக இருக்க வேண்டும்.
அதிகம் புரதம், நார்ச்சத்து, ஆரோக்கியமான கொழுப்புகள் கொண்ட இனிப்பான உணவினை எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் பழங்களால் செய்யப்பட்ட ஸ்மூத்தி போன்றவற்றை காலை உணவாக எடுத்துக் கொள்வது, உடல் எடை அதிகரிப்பு, சர்க்கரை நோய், இருதய கோளாறு, இரத்த அழுத்தம், மற்றும் பற்கள் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழிவகுக்குமாம்.
எனவே, ஊட்டச்சத்துகள் மிகுந்த ஆரோக்கியமான உணவுகளை குறிப்பாக காலை நேரத்தில் சாப்பிடுவது மிக அவசியம் ஆகும்.