முதுமையை போக்கி பொலிவான சருமத்தை பெற வேண்டுமா.. இந்த ஃபேஸ் பெக் போதும்
முகத்தின் சரும அழகிற்காக பலரும் பலவற்றை செய்கின்றனர். ஆனால் எல்லாமே அவ்வளவு பலனை தராது. சருமத்தை செயற்கை பொருட்களை கொண்டு அழகுபடுத்தும் போது உடனடி அழகை சருமம் பெற்றுக்கொடுக்கிறது.
ஆனால் இது நிலையானது அல்ல. இயற்கையில் காணப்படும் பல பொருட்களை கொண்டு சருமத்திற்கு அழகை சேர்ப்பது நமது அழகை மேன்படுத்துவதுடன் ஆரோக்கிய சருமத்தையும் கொடுக்கும்.
இதற்கு வீட்டில் காணப்படும் அல்லது சுற்றுச்சூழலில் காணப்படும் பொருட்கள் மிகவும் உதவி செய்யும். நாம் செடியாக வளர்க்கும் செம்பருத்தி பூவில் அனேகமான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. முகப்பொலிவிற்கு இதனால் என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
செம்பருத்தி பூ
செம்பருத்தி பூவில் வைட்டமின் சி ஆன்டி ஆக்ஷிடன்கள் அதிகமாக இருக்கின்றன. இது ஹைபர் பிக்மென்டேஷனை சரி செய்ய உதவுகிறது. இது சருமத்தை ஊட்டமளிக்கவும் பயன்படும்.
தயிருடன் செம்பருத்தி பூவை பொடியாக கலந்து கலவையாக தடவ வேண்டும். இது சருமத்தை ஈரப்பதமாக்கும். அரைத்த செம்பருத்தி இலையை கற்றாழையுடன் சேர்த்து பூசும் பொழுது சருமத்தின் சிவப்பழகை பெற்றுக்கொடுக்கும்.
குளிர்காலத்தில் சருமம் ஈரப்பதமாக இருக்க செம்பருத்தி பொடியை தேனுடன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இந்த ஃபேஸ் மாஸ்குகளை போடும் போது முகம் முதுமை தோற்றத்தில் இருந்து விடுபடும்.
இது தவிர சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்பை குறைக்க உதவும். முகத்தில் முல்தானி மெட்டியுடன் செம்பருத்தி கலவை போடுதல் மிகவும் நன்மை தரும். வயதானாலும் முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைக்க உதவும். இந்த செம்பருத்தி ஃபேஸ் பெக் வாரத்தில் இரண்டு நாட்கள் போடுவது நல்லது.