வெறும் வயிற்றில் ஏலக்காய் டீயை 30 நாட்களுக்கு குடித்தால் இவ்வளவு பலனா..
தினசரி சமையலில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று தான் ஏலக்காய்.
நறுமணமிக்க இந்த மசாலாப் பொருளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான மருத்துவ பலன்கள் கிடைப்பதாக ஆயுள்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.
செரிமானம் தொடர்பான பிரச்சனைகளான அஜீரண கோளாறு, வாயு தொல்லை, வயிற்று உப்புசம், குமட்டல் போன்ற வியாதிகளுக்கு ஏலக்காய் சிறந்த மருந்தாக பார்க்கப்படுகின்றது.
சில சமயங்களில் ஒரே தடவையில் நிரந்தர நிவாரணமும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிலும் குறிப்பாக ஏலக்காயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது உடலில் வரும் வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றது. அத்துடன் இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றது.
ஏலக்காயில் இருக்கும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் வாய் துர்நாற்றம் நீங்கி, வாய் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது.
இவ்வளவு நன்மைகள் கொண்ட ஏலக்காயை தொடர்ந்து வெறும் வயிற்றில் 30 நாட்களுக்கு குடித்து வந்தால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திப்பீர்கள் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் ஏலக்காய் போட்டு தினமும் டீ அல்லது தண்ணீர் குடிக்கலாம். இது அவர்களின் இரத்த சர்க்கரை அளவில் சமநிலையை ஏற்படுத்தும். இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கும் ஏலக்காய் தண்ணீரை, உணவு சாப்பிட்ட பின்னர் தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோய் உங்களிடம் கிட்டக் கூட வராது.
2. ஏலக்காய் நீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பவர்களுக்கு கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு நாளுக்கு நாள் குறைய ஆரம்பிக்கும். ஏனெனின் ஏலக்காய் நீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இது இரத்த நாளங்களில் கொழுப்புக்கள் படிவதைத் தடுத்து, மாரடைப்பு அபாயத்தை குறைக்கின்றது.
3. சில தவறான உணவு பழக்கத்தினால் செரிமான பிரச்சினையால் அவஸ்தை அனுபவிப்பார்கள். இப்படியானவர்கள் தினமும் ஏலக்காய் நீர் குடிக்கலாம். இது வயிற்றுக்குள் சென்று வயிற்றுபுண்களை ஆற்றும்.
4. ஏலக்காய் புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடும் என மருத்துவம் கூறுகின்றது. இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொண்ட போது நொதிய ஊக்குவிப்பை அதிகப்படுத்தி புற்றுநோயை எதிர்த்து போராடுகின்றது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என நினைப்பவர்கள் ஏலக்காய் நீர் அடிக்கடி குடிக்கலாம்.