சாப்பிட்டதும் மலம் கழிப்பீர்களா.. அப்போ இந்த விடயத்தில் ஜாக்கிரதை!
பொதுவாக ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் வயிறு முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
வயிறு சரியில்லாமல் போகும் பொழுது பல்வேறுப்பட்ட உடல் நல பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
அப்படியாயின் வயிற்றின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விடயத்தில் மலம் கழிப்பது முதல் இடத்தை பிடிக்கின்றது. காலையில் எழுந்தவுடன் வயிற்றிலுள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேறி விட்டால் அன்றைய நாள் நலமாக இருக்கும். ஆனால் பலருக்கு சீராக மலம் கழிக்க முடிவதில்லை.
மாறாக சிலர் காலையுணவு சாப்பிடவுடன் மலம் கழிக்க ஓடுவார்கள். இப்படி சாப்பிடவுடன் மலம் கழிக்க கழிப்பறைக்கு செல்வதை “காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ்” (Gastrocolic reflex) என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
காஸ்ட்ரோகோலிக் (Gastrocolic) பிரச்சனையால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த பிரச்சினையால் பாதிக்கபட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ ஆரம்பிக்கும் பொழுது இந்த பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
1 தவறான பழக்கங்கள் காரணமாக வயிற்றில் சில கோளாறுகள் ஏற்படலாம். இந்த சமயத்தில் சாப்பிடவுடன் மலம் வருவது போன்று தோன்றலாம்.
2. காஸ்ட்ரோகோலிக் ரிஃப்ளெக்ஸ் (gastrocolic reflex) பிரச்சினை அதிக பதட்டம் உள்ளவர்களுக்கு வரலாம் என மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார்.
3. குடல் எரிச்சல் பிரச்சினையுள்ளவர்களுக்கு சாப்பிடவுடன் மலம் கழிப்பது போன்று தோன்றலாம்.
4. சிலர் அதிகமான மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். இவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதனால் அவர்களுக்கு காஸ்ட்ரோகோலிக் நோய் தாக்கம் இருக்கலாம்.
5. அழற்சி குடல் நோய், சிலியா, இரைப்பை, உணவு ஒவ்வாமை, குடல் தொற்று போன்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் சாப்பிட்ட பின்னர் வருவது போன்று தோன்றலாம்.
முக்கிய குறிப்பு
சாப்பிட்ட உணவுகள் சாப்பிட்ட பின்னர் சரியாக 18-24 மணி நேரத்திற்குப் பிறகு தான் செரிமானமடைந்து வெளியேறும்.