ஆரோக்கியம்சமையல் குறிப்புகள்டிரென்டிங்தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க

  1. பொதுவாக கடைகளில் நாம் வாங்கி சாப்பிடும் உணவுகளை விட வீட்டில் சுத்தமான நமது கையில் சமைத்து சாப்பிடும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியமானவை.

இப்படி இருக்கும் பொழுது என்ன தான் நாம் பார்த்து பார்த்து சமைத்தாலும் சில உணவுகள் ஹோட்டல்களில் சாப்பிட்டால் அந்த சுவை வரும். இல்லாவிட்டால் கல்யாண வீடுகளில் சாப்பிடும் பொழுது அந்த சுவையை பார்க்கலாம்.

இதற்கான சமையல் ரகசியங்களை தெரிந்து கொண்டால் நாமும் கல்யாண வீட்டில் போல் உணவு சாப்பிடலாம். சுவை நாக்கில் ஒட்டிக் கொண்டால் சில சமயங்களில் அடிக்கடி சாப்பிட தோன்றும். இது உங்களின் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதன்படி, வீட்டில் என்ன தான் முயற்சி செய்தாலும் சில உணவுகளின் முழு சுவையும் எடுக்க முடியாது. இப்படி இருக்கும் பட்சத்தில் 10 நாட்களுக்கு வீட்டில் வைத்து சாப்பிடும் வகையில் கல்யாண வீட்டு வத்தல் குழம்பு எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க | Kalyana Veetu Vatha Kulambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்:

  • சின்ன வெங்காயம் – 15
  • பூண்டு – 20 பல்
  • பச்சைமிளகாய் – 5
  • தேங்காய் – ½ மூடி
  • வெந்தயம் – ¼ டீ ஸ்பூன்
  • தக்காளி – 1 மணத்தக்காளி
  • வத்தல் – 2 டேபிள் ஸ்பூன்
  • சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
  • புளி – எலுமிச்சை அளவு
  • மிளகாய் தூள் – ½ டீ ஸ்பூன்
  • சோம்பு – ¼ டீ ஸ்பூன்
  • மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்
  • கடுகு – ¼ டீ ஸ்பூன்
  • வரமிளகாய் – 5
  • நல்லெண்ணெய் – தேவையான அளவு
  • உப்பு – தேவையான அளவு

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க | Kalyana Veetu Vatha Kulambu Recipe In Tamil

  • கொத்தமல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
  • துவரம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு – 2 டீ ஸ்பூன்
  • வெந்தயம் – ¼ டீ ஸ்பூன்
  • மிளகு – ½ டீ ஸ்பூன்
  • வர மிளகாய் – 10
  • கடுகு – 1 டேபிள் ஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • மஞ்சள் தூள் – ¼ ஸ்பூன்
  • பச்சரிசி – ½ டீ ஸ்பூன்
  • கருவேப்பிலை – 2 கொத்து

செய்முறை

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க | Kalyana Veetu Vatha Kulambu Recipe In Tamil

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரிசி, கொத்தமல்லி விதை, வரமிளகாய் 10, கடுகு, வெந்தயம், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகு, கருவேப்பில்லை ஆகியவற்றை போட்டு நொறுங்கும் அளவிற்கு வறுக்கவும்.

பின் அடுப்பை அணைத்து விட்டு அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயம் சேர்த்து கிளறி விட்டு ஆற வைத்து நன்றாக அரைத்து கொள்ளவும். தேங்காய் பூ அல்லது நறுக்கிய சோம்பு சேர்த்து பவுடர் போல் அரைத்து கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, வெந்தயம் போட்டு பொரிய விட்டு மிளகாய், மணத்தக்காளி வத்தல், சுண்டைக்காய், சின்ன வெங்காயம், பூண்டு, நறுக்கிய பச்சைமிளகாய் ஆகியவற்றை ஒன்று பின் ஒன்றாக சேர்த்து வதக்கவும்.

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க | Kalyana Veetu Vatha Kulambu Recipe In Tamilஇவை வதங்கிய பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், கருவேப்பிலை, பூண்டு, மிளகாய் தூள் சேர்த்து கிளறி விடவும். பின்னர் அரைத்து வைத்த தேங்காய் விழுதை போட்டு வாணலியில் ஒட்டாத பதம் வரும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். கொதிக்கும் பொழுது புளி கரைச்சலையும் ஊற்றி விடவும்.

தொடர்ந்து உப்பு, வெல்லம் சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்த பொடி, கருவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும். கடைசியாக அடுப்பை அணைத்து விட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கிளறி விட்டு இறக்கினால் சுவையான கல்யாண வீட்டு வத்தல் குழம்பு தயார்!

10 நாள் வரை கெட்டுப்போகாத கல்யாண வீட்டு வத்த குழம்பு வைக்கலாம்.. ரெசிபி தெரிஞ்சிக்கோங்க | Kalyana Veetu Vatha Kulambu Recipe In Tamilமுக்கிய குறிப்பு:

வத்தல் குழம்பை சுத்தமான கண்ணாடி பாட்டிலில் போட்டு வைக்கலாம் அல்லது பிரிட்ஜ்-ல் வைத்து கூட மாதக்கணக்கில் கெட்டு போகாமல் சாப்பிடலாம். அவசரத்திற்கு உங்களுக்கு உதவியாக இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker