கூந்தல் பராமரிப்பு: வீட்டிலேயே கூந்தலுக்கு Keratin செய்வது எப்படி..
கூந்தல் பராமரிப்பு என்பது நாம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது.பொதுவாக இதை பெண்கள் தான் அதிக கவனம் செலுத்துவார்கள். தற்போது இருக்கும் மக்களின் வாழ்க்கை நடைமுறையினால் கூந்தல் பிரச்சனை பல காணப்படுகின்றது.
தூசி, மாசு, கலரிங் மற்றும் கெமிக்கல் ஹேர் ட்ரீட்மென்ட் காரணமாக, தலைமுடி அதிகமாக சேதமடைகிறது. ஆரோக்கியமான தலைமுடிக்கு முறையான பராமரிப்பு அவசியம். தலை முடி பிரச்சனைகளை அலட்சிய படுத்த கூடாது. கடுமையான பாதிப்புகளைத் தடுக்க, சிறிது நேரம் ஒதுக்கித் தலைமுடியை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.
இந்த கூந்தல் பிரச்சகைக்கு நமது உணவு பழக்கவழக்கம் கூந்தல் பராமரிப்பு முறையும் உள்ளடங்கும். கூந்தலை மிகவும் மென்மையாகவும் பளபளப்பாகவும் பணத்தை நிறைய செலவு செய்து வருகின்றனர். ஆனால் இதை வீட்டிலேயே செய்ய முடியும். அப்படி வீட்டில் Keratin செய்யும் முறையை இந்த பதிவில் பார்க்கலாம்.
தலையை நாம் அலசும் போது உகந்த முறையில் ஷாம்பூக்களை பயன்படுத்த வேண்டும்.ஷாம்பூவை தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் முடியின் அமைப்பு மற்றும் நிலை அறிந்து அதற்கு ஏற்ற ஷாம்பூவினை தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்கு வறண்ட முடி இருந்தால், உங்கள் தலைமுடியை நீரேற்றமாக வைத்திருக்கக்கூடிய ஷாம்பூவை வாங்க வேண்டும். சல்பேட் உள்ள ஷாம்பூகள் முடியை மென்மையாக்கலாம், ஆனால் சிறிது காலம் கழித்து அவை உங்கள் முடியை சேதப்படுத்தத் தொடங்குகின்றன.
பலர் பணத்தை செலவு செய்து தலைமுடி சேதம் அடைந்திருந்தால் பார்லர் சென்று முடியை அழகுபடுத்த கரட்டீன் செய்கின்றனர். இது குறிப்பிட்ட சில காலத்திற்கு கூந்தலுக்கு அழகையும் பளபளப்பையும் கொடுக்கும்.
இது நமது உடல் ஆரோக்கியத்திற்கு முற்றிலும் கேடு தான் விளைவிக்கும். இதற்காக நாம் வீட்டிலேயே கரட்டீன் செய்யலாம் இப்படி செய்தால் நமது உடல் நலத்தில் எந்த பாதிப்பும் உண்டாகாமல் தலைமுடியும் சிறப்பாக இருக்கும்.
இதற்கு முதலில் ஐந்து வெண்டிக்காய்களை எடுத்து அதை சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தேவையான அளவு நீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும்.
பின்னர் இது கொதித்து வந்ததும் அதை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதில் சோளம் மா கொஞ்சம் போட்டு அதை அடுப்பில் வைத்து சூடாக்கி கெட்டி பதம் வந்ததும் அதை கீழே இறக்கி அதை ஆறியதும் அதில் பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்றாக கலக்கி தலைமுடியில் அப்பிளை செய்யவும
பின்னர்2 மணி நேரம் கழித்து ஷாம்பூ கொண்டு முடியை அலசி எடுத்தால் உங்களது முடி வீட்டிலேயே கரட்டீன் செய்யதது போல அழகாக மாறிவிடும்.