குளிக்கும் நீரில் இதை கலந்து குளித்து பாருங்க! பல நோய்களிலிருந்து தப்பிக்கலாம்
பருவ கால நோய்களிலிலிருந்து தப்பிக்க குளிக்கும் நீரில் இந்த பொருட்களில் ஏதாவது ஒன்றினை கலந்து குளித்தால் நோய் தொற்றுக்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம்.
பொதுவாக மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களின் தாக்கமும் அதிகரித்துவிடும். காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றினால் பாதிக்கப்படும் முன்பு சில செயல்களை முன் எச்சரிக்கையாக செய்தால் நோய்களிலிருந்து தப்பிக்கலாம்.
அதாவது குளிக்கும் நீரில் சில பொருட்களை கலந்தால் பருவ நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அவை என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வேம்பு
மருத்துவ குணம் கொண்ட வேம்பின், பூ மற்றும் இலையை குளிக்கும் போது நீரில் கலந்து குளித்தால் ஆரோக்கிய நன்மையை பெறலாம். சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்படாமலும், பருவ கால நோய்கள் ஏற்படாமலும், செரி அரிப்பு போன்ற பிரச்சனையையும் தடுக்கின்றது.
துளசி இலைகள்
மருத்துவ குணங்கள் அதிகம் கொண்ட துளசி குளிர்ச்சி தன்மை கொண்ட இலைகளில் ஒன்றாகும். இதனை தண்ணீரில் போட்டு சூடாக்கி குளித்தால் ஆரோக்கியத்தை அளிப்பதுடன், பருவகால நோய்களையும் தடுக்கின்றது.
மஞ்சள்
கிருமி நாசினியாக செயல்படும் மஞ்சள் அலர்ஜி, பாக்டீரியா, பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவுவதுடன், குளிக்கும் நீரில் கலந்து குளித்தால் நோய் தொற்றிலிருந்து விடுபடலாம்
செம்பருத்தி இலை
முடியின் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் செம்பருத்தி பூ மற்றும் இலைகளை தண்ணீரில் போட்டு சூடாக்கி குளித்தால், முடி ஆரோக்கியமாக இருப்பதுடன், பருவகால நோய்களும் வராமல் தடுக்கும்.
சூடான நீர்
பருவமழை காலங்கள் ஆரம்பித்துவிட்டாலே வெந்நீரில் குளிப்பது சருமத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கின்றது. பாக்டீரியாக்களை கொள்வதுடன், சருமத்தில் இறந்த செல்களை நீக்கும். பருவகால நோய்களிலிருந்தும் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்க வெந்நீரில் குளிப்பது நல்லது.