நாள்பட்ட நோய்களுக்கு மருந்தாகும் கறிவேப்பிலை- வெறும் வயிற்றில் சாப்பிடுங்க
பொதுவாக கறிவேப்பிலை தென்னிந்திய உணவுகளில் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகின்றது.
கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள் அறிந்த மக்கள் இதனை தினமும் உணவுடன் சேர்த்து கொள்வார்கள். இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்துள்ளன.
அத்துடன் ஆன்டி இன்ஃபிளமேட்டரி, ஆன்டி மைக்ரோபியல் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு போன்ற பண்புகளைக் கொண்டுள்ளது.
அந்த வகையில், வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.
1. கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது குடலுக்குள் சென்று அதில் ஒட்டியிருக்கும் சிறிய துண்டுகளை இல்லாமலாக்குகின்றது. அஜீரணம், குடல் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளையும் தடுக்கிறது.
2. கறிவேப்பிலையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது. இதனால் டயட் பிளானில் இருப்பவர்கள் உணவில் சேர்த்து கொள்ளலாம். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை எரிக்கவும் கறிவேப்பிலை உதவுகின்றது.
3. இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்தும் செயன்முறையை கறிவேப்பிலை செய்கிறது. நார்ச்சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலையில் குளுக்கோஸ் உறிஞ்சும் ஆற்றல் உள்ளது. அத்துடன் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.
4. கண் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆற்றல் கறிவேப்பிலைக்கு உள்ளது. ஏனெனின் கறிவேப்பிலையில் பீட்டா கரோட்டின் அதிக அளவு உள்ளது. இது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாத்து கண்புரை நோயை வர விடாமல் தடுக்கிறது.
5. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து உள்ளது. இந்த சத்து வறட்சி, முகப்பரு மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷன் போன்ற சரும பிரச்சினைகளை குணமாக்குகிறது. காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் கறிவேப்பிலையை சாப்பிடுவதால் முடி வளர்ச்சியை அதிகமாகும்.