காலையில் உங்க முகம் பொலிவாக இருக்கணுமா.. அப்போ இரவில் கட்டாயம் இந்த உணவை சாப்பிடுங்க
பொதுவாகவே அனைவருக்கும் அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசை. குறிப்பாக பெண்கள் ஆண்களை விடவும் தங்கள் சரும அழகு குறித்து அதிகம் அக்கறை செலுத்துபவர்களாக இருப்பார்கள்.
சரும பராமரிப்புக்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுபவர்கள் ஏறாளம். உண்மையில் சருமத்தை பராமரிக்க வெளியில் நாம் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்கள் அனைத்தும் தற்காலிகம் தான். அதனை பயன்படுத்துவதை நிறுத்தினால் மீண்டும் சருமம் பழைய நிலைக்கு போய்விடும்.
இயற்கையாகவே சருமம் எப்போதும் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் இது நாம் உள்ளெடுத்துக்கொள்ளும் உணவில் தான் தங்கியிருக்கின்றது.
அந்த வகையில் கலையில் முகம் பொலிவுடன் இருப்பதற்கு இரவில் குறிப்பிட்ட சில உணவுகளை சாப்பிடுவது பெரிதும் துணைப்புரியும். இவ்வாறு சருமத்தை பொலிவாக்கும் உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
டார்க் சாக்லேட்டுகள்
டார்க் சாக்லேட்டுகள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க உதவுகின்றமையால் இரவில் அதனை சாப்பிடுவதால் சிறந்த தூக்கத்தை கொடுக்கின்றது.
அதனால் காலையில் புத்துணர்வாக உணர்வீர்கள். மேலும் இது சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி சருமத்தை இயற்கையாகவே பொலிவடைய செய்கின்றது.
எனவே இரவில் சிறிய துண்டு டார்க் சாக்லேட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. இது மன அழுதத்தத்தையும் குறைக்க உதவுகின்றது.
வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் ஆகியவை செறிந்து காணப்படுவதால் இது இரவில் சாப்பிம சிறந்த உணவாகும். இதுவும் இரவில் சிறந்த தூக்கத்தை பெற உதவுகின்றது.
இரவில் தூங்கும் முன்னர் வாழைப்பழம் சாப்பிடுவது செரிமான பிரச்சினைகளை சீர் செய்வதுடன், இதய ஆரோக்கியம் மற்றும் சிறுநீரக பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும். இரவில் வாழைப்பழம் சாப்பிடுவது சரும ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
அவோகேடா
அவோகேடா வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஆற்றல் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. அதனை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் இயற்கையானவே பொலிவாகவும் பளப்பளப்பாகவும் மாறுவதை கண்கூடாக பார்க்க முடியும்.
காலையில் எழும் போது சருமம் பொலிவாக இருக்க வேண்டும் என்றால் இரவில் அவோகேடா சாப்பிடுவது நல்ல பலனை கொடுக்கும்.
நட்ஸ்
நட்ஸ் வகைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும்.மேலும் படுக்கை நேர சிற்றுண்டிக்கு இது சிறந்த தெரிவாக இருக்கின்றது. இவற்றில் வைட்டதின் ஈ அதிகளவில் இருப்பால் சருமத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்க உதவுகின்றது.
பாப்கார்ன்
பாப்கார்னில் ஆக்ஸிஜனேற்ற பண்புகளும் நார்ச்சத்தும் நிறைந்து இருப்பதால், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன் இதய நோய்களுக்கான அபாயத்தையும் குறைக்க உதவுகின்றது. இரவில் பாப்கார்ன் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைவடைவதுடன் ஆழ்ந்த தூக்கமும் கிடைக்கின்றது. அதனால் காலையில் சருமம் பொலிவாக இருக்கும்.